- தக்காளி - ஒன்று
- முட்டை - 2
- புளி - எலுமிச்சை அளவு
- உப்பு - தேவைக்கு
- எண்ணெய் - தேவைக்கு
- தூள் வகை:
- மஞ்சள் பொடி - அரை தேக்கரண்டி
- மல்லி பொடி - ஒரு தேக்கரண்டி
- மிளகாய் பொடி - ஒரு தேக்கரண்டி
- வறுத்து அரைக்க:
- தேங்காய் துருவல் - அரை கப்
- சீரகம் - ஒரு தேக்கரண்டி
- சோம்பு - அரை தேக்கரண்டி
- கடலை உளுத்தம் பருப்பு - தலா ஒரு தேக்கரண்டி
- வர மிளகாய் - 4
- மிளகு - ஒரு தேக்கரண்டி
- கொத்தமல்லி - ஒரு தேக்கரண்டி
- வெந்தயம் - அரை தேக்கரண்டி
- பெருங்காயம் - ஒரு சிட்டிகை
- தாளிக்க:
- கடுகு - சிறிது
- பச்சை மிளகாய் - 3
- பெரிய வெங்காயம் - ஒன்று
- கறிவேப்பிலை - சிறிது
- பூண்டு - 6 பல்
முதலில் தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும். புளியை கரைத்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளி, மிளகாயை நறுக்கிக் கொள்ளவும்.
| |
தேங்காயை தவிர மீதமுள்ள வறுத்து அரைக்க வேண்டிய பொருட்களை எண்ணெய் இல்லாமல் வறுத்து கொள்ளவும்.
| |
தேங்காயை எண்ணெய் இல்லாமல் தனியாக வறுத்து, மேலுள்ள வறுத்த மற்ற பொருட்களுடன் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
| |
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, பூண்டு, வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும்.
| |
பின்பு தக்காளியை சேர்த்து குழையும்படி வதக்கவும்.
| |
அரைத்து வைத்த விழுதை சேர்த்து தேவையான உப்பு சேர்க்கவும்.
| |
ஐந்து நிமிடம் கழித்து பொடி வகைகளை சேர்த்து கிளறவும்.
| |
பின்னர் புளிக்கரைசலை சேர்க்கவும்.
| |
நன்கு எண்ணெய் பிரிந்து குழம்பு ரெடி ஆனதும் முட்டையை உடைத்து ஊற்றவும். முட்டை வெந்து மேலே எழும்பி வரும். முட்டையை குழம்புடன் சேர்த்து நன்கு கலக்கவும்.
| |
சுவையான முட்டை புளி குழம்பு ரெடி.
|
0 comments:
Post a Comment