Pages

Tuesday, 31 July 2012

கோலாபுரி மட்டன் கறி



 
  • வறுத்து அரைக்க :
  • பூண்டு - 6 பல்
  • சீரகம் - ஒரு தேக்கரண்டி
  • மிளகு - ஒரு தேக்கரண்டி
  • சோம்பு - ஒரு தேக்கரண்டி
  • தனியா விதை - ஒரு தேக்கரண்டி
  • பட்டை - ஒன்று
  • கிராம்பு - 2
  • பிரியாணி இலை - ஒன்று
  • முந்திரி - 10
  • கசகசா - ஒரு தேக்கரண்டி
  • எள் - ஒரு கைப்பிடி
  • தேங்காய் துருவல் - ஒரு கைப்பிடி
  • பெரிய வெங்காயம் - ஒன்று
  • பச்சையாக அரைக்க:
  • தக்காளி - ஒன்று
  • மட்டனை வேக வைக்க:
  • எண்ணெய் - தாளிக்க
  • பச்சை மிளாகாய் - 3
  • வெங்காயம் - ஒரு கைப்பிடி
  • மஞ்சள் பொடி - கால் தேக்கரண்டி
  • உப்பு - சிறிது
  • இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
  • கறி - ஒரு கிலோ
  • இதர பொருட்கள்:
  • வரமிளகாய் - 3
  • கறிவேப்பிலை - 10 இதழ்
  • மிளகாய் பொடி - 1 1/2 தேக்கரண்டி
  • சீரகம், தனியா, கரம் பொடிகள் - தலா ஒரு தேக்கரண்டி
  • தாளிக்க - எண்ணெய்
  • உப்பு - தேவைக்கு


முதலில் தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும். தக்காளியை நன்கு அரைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாயை கீறி, வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும்.
குக்கரில் எண்ணெய் ஊற்றி பச்சை மிளகாய், வெங்காயம், மஞ்சள் பொடி மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
கறியுடன் உப்பு சேர்த்து போட்டு 6 விசில்கள் வைத்து எடுக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பூண்டை போட்டு நன்கு வதக்கவும்.
பின் வறுத்து அரைக்க வேண்டிய பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வறுக்கவும்.
பின் கடைசியாக வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி ஆற வைத்து நைசாக அரைக்கவும்.
பின்னர் அதே கடாயில் எண்ணெய் ஊற்றி வரமிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
அதில் அரைத்து வைத்துள்ள விழுதினை சேர்த்து நன்கு 5 நிமிடம் வதக்கவும்.
சிறிது நேரம் கழித்து அரைத்த தக்காளியை சேர்த்து பொடி வகைகளை சேர்க்கவும்.
பின் கறியை மட்டும் சேர்த்து ஒன்று சேர பிரட்டி 5 நிமிடம் கழித்து மட்டன் ஸ்டாக் ( கறி வெந்த நீர் ) சேர்த்து, தேவையெனில் தேங்காய் பால் ஊற்றி, மூடி போட்டு 10 நிமிடம் அடுப்பில் வைத்து, எண்ணெய் பிரிந்து வரும் நிலையில் இறக்கவும்.
சுவையான கோலாபுரி மட்டன் கறி தயார். ஒரு முறை சமைத்தால் எப்போதும் சமைக்கத் தூண்டும் சுவைக் கொண்டது.

0 comments:

Post a Comment