Pages

Tuesday, 31 July 2012

பிரிஞ்சி



 
  • பாஸ்மதி அரிசி - ஒரு கப்
  • வெங்காயம் - ஒன்று
  • இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
  • பச்சை மிளகாய் - 4
  • காரட் - 2
  • பீன்ஸ் - 15
  • உருளை - 1
  • பச்சை பட்டாணி - 3 மேசைக்கரண்டி
  • சோளம் - 3 மேசைக்கரண்டி
  • பட்டை, ஏலம், கிராம்பு, சோம்பு, பிரிஞ்சி இலை - தாளிக்க
  • உப்பு, நெய் - தேவைக்கு ஏற்ப
  • புதினா - ஒரு பிடி
  • மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
  • தனியா, சோம்பு, சீரகம் - தலா ஒரு தேக்கரண்டி
  • முந்திரி - சிறிது
  • கொத்தமல்லி - அரை கட்டு
  • கெட்டி தேங்காய் பால் - ஒரு கப்


சோம்பு, சீரகம், தனியாவை வெறுமனே வறுத்து ஆற விடவும். காய்கறிகளை பெரிய துண்டுகளாக நறுக்கவும்.
நெய் காய்ந்ததும் சிறிது புதினா, கொத்தமல்லி, தாளிக்க கொடுத்தவை, வெங்காயம், மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, காய்கறிகள் சேர்த்து வதக்கவும்.
மஞ்சள்தூள், உப்பு சேர்த்து பிரட்டவும் .
தேங்காய்பால், அரிசிக்கு மீதம் தேவைப்படும் தண்ணீர் சேர்த்து கொதி வந்ததும், அரிசி, புதினா, கொத்தமல்லி சேர்க்கவும்.
ஆற வைத்த சோம்பு, சீரகம், தனியாவை இடித்து வைக்கவும்.
அரிசி கொதி வந்ததும் இடித்து வைத்த மசாலா தூவி, கொத்தமல்லி சேர்த்து மூடி வேக விடவும்.
முந்திரியை நெய்யில் வறுக்கவும்.
வெந்த சாதம் மேலே முந்திரி தூவி விடவும். சுவையான பிரிஞ்சி தயார்.

இதனுடன் வெறும் இறைச்சி கூட சேர்த்து செய்யலாம்.

0 comments:

Post a Comment