Pages

Friday, 27 July 2012

வரலாற்றில் இன்று


ஜுலை
27
  • 1794 - பிரெஞ்சுப் புரட்சி: புரட்சியின் எதிரிகளாகக் கருதப்பட்ட 17,000 பேரத் தூக்கிலிட ஆதரித்தமைக்காக மாக்சிமிலியன் ரோப்ஸ்பியர் கைது செய்யப்பட்டார்.
  • 1865 - வெல்சிய குடியேறிகள் ஆர்ஜெண்டீனாவின் arrive in Argentina at சூபூட் பள்ளத்தாக்கை அடைந்தனர்.
  • 1921 - பிரெட்றிக் பாண்டிங் தலைமையில் டொறொண்டோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களினால் இன்சுலின் கண்டறியப்பட்டது.
  • 1941 - ஜப்பானியர்கள் பிரெஞ்சு இந்தோ-சீனாவைக் கைப்பற்றினர்.
  • 1953 - கொரியப் போர் முடிவு: ஐக்கிய அமெரிக்கா, சீனா, மற்றும் வட கொரியா ஆகியவற்றுக்கிடையில் போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டது. தென் கொரியா இவ்வொப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டாலும், உடன்பாட்டை மதிப்பதாக வாக்குறுதி தந்தது.
  • 1955 - ஆஸ்திரியாவில் மே 9, 1945 முதல் நிலை கொண்டிருந்த இரண்டாம் உலகப் போரின் நட்பு நாடுகளின் படைகள் அங்கிருந்து விலகின.
  • 1975 - விடுதலைப்புலிகளின் முதலாவது ஆயுதத் தாக்குதல் நடத்தப்பட்டது. யாழ்ப்பாணம் மாநகரத் தலைவர் அல்பிரட் துரையப்பா சுட்டுக் கொல்லப்பட்டார்.
  • 1976 - கனடாவின் Montreal நகரில் 21 வது ஒலிம்பிக் போட்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது ஓய்வு நாளில் திடீரென்று மழை பெய்ததில் ஒலிம்பிக் ஜோதி அணைந்து போனது. ஒலிம்பிக் பந்தய வரலாற்றிலேயே பந்தயம் நடந்து கொண்டிருக்கும் போது ஜோதி அணைந்தது அதுவே முதல் முறை.
  • 1983 - வெலிக்கடை சிறைச்சாலைப் படுகொலைகள்: கொழும்பு வெலிக்கடை சிறையில் இடம்பெற்ற இரண்டாம் கட்ட படுகொலை நிகழ்வில் 18 தமிழ்க் கைதிகள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர்.
  • 1990 - பெலாரஸ் சோவியத் ஒன்றியத்தில் இருந்து விடுதலையை அறிவித்தது
  • 1990 - திரினிடாட் டொபாகோவில் இஸ்லாமியத் தீவிரவாதிகள் நடத்திய ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் பிரதமர் மற்றும் அமைச்சர்களை பணயக் கைதிகளாக ஆறு நாட்கள் வைத்திருந்தனர்.
  • 2002 - உக்ரைனின் லுவிவ் நகரில் வான் களியாட்ட நிகழ்ச்சியின் போது போர் விமானம் ஒன்று மக்களின் மீதூ வீழ்ந்ததில் 85 பேர் கொல்லப்பட்டனர். 100 பேர் காயமடைந்தனர்.

சுவாசக் கோளாறுகளைப் போக்கும் கொத்தமல்லி


கொண்டவையாகும். 
மக்கள் பிணி நீங்கி நீண்ட ஆரோக்கிய வாழ்வு வாழ்வதற்கும், இந்த மூலிகைகள் நமக்கு உதவுகின்றன. இதனையே நாம் கற்ப மூலிகைகள் என்று அழைக்கிறோம். மிளகு, சீரகம், பூண்டு, பெருங்காயம், கொத்தமல்லி போன்றவற்றை தினமும் மசாலாவாக அரைத்து குழம்பு செய்து உண்ணும் வழக்கம் தென்னிந்தியாவிற்கே உரிய சிறந்த பழக்கமாகும். 
கறிவேப்பிலை போல் கொத்தமல்லியும் நம் சமையலில் அதிகம் இடம்பெறும் ஒரு மூலிகைப் பொருள் ஆகும். இது வாசனைக்காக மட்டுமே சேர்க்கப்படுவது என நம்மில் பலர் நினைப்பதுண்டு. ஆனால் வாசனையோடு அதன் மருத்துவக் குணங்களும் சேர்க்கப்படுகிறது என்பதை அறிந்திருக்க மாட்டோம்.
நம் முன்னோர்கள் உணவின் மூலமே நோயற்ற வாழ்வு வாழ்ந்தார்கள் என்பதற்கு கொத்தமல்லி, கறிவேப்பிலை போன்றவை சாட்சிகள்.
கடையில் காய் வாங்கினால் ஏதோ கொசுறாக கொத்தமல்லித் தழையைக் கொடுப்பார்கள். அதை நாமும் வாங்கி பயன்படுத்துவோம். ஆனால் அதிலுள்ள மருத்துவப் பயனை அறிந்ததில்லை.
பசுமையான, மணமுள்ள இலைகளையும் சிறிய வெண்ணிற மலர்களையும் உருண்டையான விதைகளையும் உடைய சிறு செடி கொத்தமல்லி. இதன் விதைகளுக்கு தனியா என்று பெயர். இது பலசரக்குக் கடைகளில் கிடைக்கும்.
நஞ்சை, புஞ்சை காடுகளிலும் இதனைப் பயிரிட்டு வளர்க்கின்றனர். இதன் விதை மிகவும் மருத்துவப் பயன் கொண்டது. இலை, பூ, காய், வேர் அனைத்தும் மருத்துவப் பயன் உடையவை. இது இந்தியா முழுவதும் பணப்பயிராகப் பயிரிடப்படுகிறது.
இது கார்ப்புச் சுவை கொண்டது. குளிர்ச்சித் தன்மையுடையது. சிறுநீர் பெருக்கல், உடல் வெப்பம் சமன்படுத்தல், வயிற்று வாயுவகற்றல், செரிமானம் மிகுத்தல் ஆகிய மருத்துவப் பயன்களைக் கொண்டது.
கொத்தமல்லியின் பயன்கள்:
* சுவையின்மை நீங்கும். 
* வாய்ப்புண், வயிற்றுப் புண் குணமாகும்.
* செரிமான சக்தியைத் தூண்டி, உண்ட உணவை நன்கு ஜீரணிக்கச் செய்யும்.
* வயிற்றுப் பொருமல், வாயுக் கோளாறுகளைப் போக்கும். மலச்சிக்கல் நீங்கும். இதில் உள்ள நார்ச்சத்து மலக்குடலில் உள்ள தேவையற்ற கசடுகளை வெளியேற்றும். மூலநோயாளிகளுக்கு இது சிறந்த மருந்தாகும்.
* புளித்த ஏப்பம், நெஞ்செரிச்சல் போன்றவை மாறும்.
* கண் நரம்புகளில் உள்ள வறட்சியைப் போக்கி கண்ணை பலமடையச் செய்யும். கண் சூடு குறையும்.
* சுவாசம் சம்பந்தப்பட்ட கோளாறுகளைப் போக்கும். மூக்கடைப்பு, மூக்கில் நீர் வடிதல், தொண்டைக்கட்டு, வறட்டு இருமல் நீங்கும்.
* உடலுக்குத் தேவையான சக்திகளைச் சேமித்து வைத்து தேவைப்படும்போது கொடுக்கும் உறுப்புதான் கல்லீரல். இது வீக்கமோ, சுருக்கமோ அடைந்து பாதிக்கப்பட்டால், உடலானது பல நோய்களின் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும். இதனால் கல்லீரலைப் பலப்படுத்த கொத்தமல்லி சிறந்த நிவாரணியாகும்.
* நல்ல தூக்கத்தைக் கொடுக்கும். 
* மன அமைதியைக் கொடுக்கும்.
* உடலுக்கு வலுவைக் கொடுக்கும்.
* விந்துவைப் பெருக்கும் குணம் இதற்குண்டு.
* நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் மயக்கம், தலைச்சுற்றல் போன்றவற்றை நீக்கும். இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையைக் குறைக்கும். இரத்த அழுத்த நோயாளிகளும் இதனை உணவில் சேர்த்துக்கொண்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
* வாய் நாற்றத்தைப் போக்கும்.
* பல்வலி, ஈறுவீக்கம் குறையும்.
* சிறுநீர், வியர்வையைப் பெருக்கும்.
கொத்தமல்லி இலை - 1 கைப்பிடி
சின்ன வெங்காயம் - 5
மிளகு - 10
சீரகம் - 2 டீ ஸ்பூன் 
பூண்டு - 5 பல்
மஞ்சள் தூள் - 1/4  டீ ஸ்பூன் 
கறிவேப்பிலை - 1 கொத்து
உப்பு -  தேவையான அளவு
எடுத்து நீர் விட்டு சூப் செய்து காலை, மாலை, டீ, காபிக்கு பதிலாக இதனை அருந்தி வந்தால் உடல் களைப்பு நீங்கி மேற்கண்ட பாதிப்புகள் குறையும்.
கொத்தமல்லி இலையுடன் கறிவேப்பிலை, புதினா, சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி, தேங்காய் சேர்த்து துவையல் செய்து உண்டு வந்தால் உடல் சூடு தணிவதுடன், பித்த அதிகரிப்பினால் உண்டாகும் பித்தச்சூடும் தணியும்.
5 கிராம் கொத்தமல்லி விதையை இடித்து அரைலிட்டர் நீரில் விட்டு 100 மி.லியாகக் காய்ச்சி வடிகட்டி பால், சர்க்கரை கலந்து காலை, மாலை சாப்பிட இதய பலவீனம், மிகுந்த தாகம், நாவறட்சி, மயக்கம், செரியாமையால் ஏற்படும் வயிற்றுப்போக்கு ஆகியவை நீங்கும்.
கொத்தமல்லி சூரணம்:
கொத்தமல்லி - 300 கிராம்
சீரகம் - 50 கிராம்
அதிமதுரம் - 50 கிராம்
கிராம்பு - 50 கிராம்
கருஞ்சீரகம் - 50 கிராம்
இலவங்கப்பட்டை - 50 கிராம்
சதகுப்பை - 50 கிராம்
இவை அனைத்தையும் இளவறுப்பாய் வறுத்து பொடி செய்து சலித்து 600 கிராம் வெள்ளை கற்கண்டு பொடியுடன் கலந்து வைக்கவும். இந்த சூரணத்தை காலை, மாலை 1 தேக்கரண்டி சாப்பிட்டால் உடல் சூடு, செரியாமை, வாந்தி, விக்கல், நாவறட்சி, ஏப்பம், தாது இழப்பு, நெஞ்செரிப்பு போன்றவை குணமாகும்.
கொத்தமல்லி கீரைக்கும், விதைக்கும் கண்பார்வையைத் தூண்டும் குணம் உண்டு.
காய்ச்சலாலும், குடல் அலர்ஜியாலும் பித்தம் அதிகரித்து வயிற்றில் சளி ஏற்பட்டு அதனால் நாவில் சுவையின்மை ஏற்படும். இது பொதுவாக பித்த அதிகரிப்பினால் வருவது. இதற்கு, கொத்தமல்லி இலை, சீரகம், சேர்த்து அதனுடன் பனங்கற்கண்டு கலந்து கஷாயம் செய்து அருந்தினால் சுவையின்மை நீங்கி, பித்த கிறு கிறுப்பு நீங்கும்

சோயா கிரேவி



 
  • சோயா (வேக வைத்து பிழிந்து 2 அல்லது 4 துண்டுகளாக நறுக்கியது) - ஒரு கப்
  • வெங்காயம் (பெரியது) - ஒன்று
  • தக்காளி - ஒன்று
  • பச்சை மிளகாய் - ஒன்று
  • கறிவேப்பிலை - சிறிது
  • கடுகு
  • பட்டை - ஒன்று
  • அன்னாசி மொக்கு - ஒன்று
  • கிராம்பு - ஒன்று
  • மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
  • மல்லி தூள் - ஒரு தேக்கரண்டி
  • மசாலா தூள் - ஒரு சிட்டிகை
  • சீரகத்தூள் - ஒரு சிட்டிகை
  • உப்பு - தேவையான அளவு
  • எண்ணெய் - தேவையான அளவு
  • கேசரி பவுடர் - சிறிது
  • சோயா சாஸ்
  • சில்லி சாஸ்


குக்கரில் எண்ணெய் ஊற்றி கடுகு, பட்டை, கிராம்பு, அன்னாசி மொக்கு போட்டு தாளிக்கவும். அடுத்து அதில் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
பின்னர் தக்காளி போட்டு வதக்கவும்
பிறகு தூள் வகைகளை ஒவ்வொன்றாக போட்டு வதக்கவும்.
தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளித்துக் கொள்ளவும். பிறகு கேசரி பவுடர், உப்பு போட்டு கிளறவும்.
இப்போது வேகவைத்து நறுக்கிய சோயாவை சேர்த்து வதக்கவும்.
குக்கரை மூடி வேக விடவும். பின்னர் 5 நிமிடம் குக்கரை சிம்மில் வைத்து பிறகு திறக்கவும்.
பின்னர் அதில் சோயசாஸ், சில்லி சாஸ் கலந்து சிறிது நேரம் கிளறி இறக்கவும்.
இப்போது சுவையான மற்றும் சத்தான சோயா கிரேவி தயார். இதை சப்பாத்தியுடன் தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும்

ஆலு பரோட்டா



 
  • கோதுமை மாவு - ஒரு கப்
  • உருளைக்கிழங்கு - 2
  • பச்சை மிளகாய் - 2
  • இஞ்சி - சிறிதளவு
  • மல்லி இலை - சிறிதளவு
  • சீரக தூள் - கால் தேக்கரண்டி
  • கரம் மசாலா தூள் - அரை தேக்கரண்டி
  • ஆம்சூர் பொடி - அரை தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
  • உப்பு - தேவையான அளவு


கோதுமை மாவை உப்பு சேர்த்து சப்பாத்தி பதத்திற்கு பிசைந்து அரைமணி நேரமாவது மூடி வைத்து ஊற விடவும். உருளையை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். இஞ்சி, மிளகாய் மற்றும் மல்லி இலை சேர்த்து கொரகொரப்பாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
அரைத்தவற்றுடன் எல்லா தூள் வகைகள், உப்பு சேர்த்து உருளையும் சேர்த்து பிசைந்துக் கொள்ளவும். இதுவும் சப்பாத்தி மாவு பதத்திற்கு இருக்க வேண்டும். சிறு சிறு உருண்டைகளாக பிடித்து வைக்கவும். அதே எண்ணிக்கை மாவுருண்டைகளை பிடித்து வைக்கவும். மாவுருண்டை உருளை உருண்டையை விட பெரியதாக இருத்தல் அவசியம்.
மாவை எடுத்து சிறிதளவு தேய்த்து அதில் கலவையை வைத்து மூடவும். நன்றாக மூடியவுடன் கையால் தட்டிய பின்னர் திரட்டவும்.
கல் சூடானதும் சிறிதளவு எண்ணெய் தேய்த்து (விருப்பப்பட்டால்) பராத்தாவை போட்டு நன்கு வெந்ததும் மறுப்புறம் திருப்பி போட்டு எடுக்கவும். இப்படி உப்பி வரும்.
தயிரில் சாட் மசாலா (விருப்பப்பட்டால்) தூவி, ஊறுகாயுடன் பரிமாறவும். குழந்தைகளுக்கென்றால் பரிமாறும் முன்பு சிறிதளவு வெண்ணெய் தேய்த்து பரிமாறவும். இங்கே உள்ள ஊறுகாய் அன்பரசி செய்துக் காட்டிய மிளகாய் ஊறுகாய். இந்த பராத்தவிற்கு அமர்களமாக இருந்தது.

செட்டிநாடு தோசை



 
  • தோசை மாவு - 2 கப்
  • வெங்காயம் - ஒன்று
  • தக்காளி - ஒன்று
  • காலிஃப்ளவர் - அரை கப்
  • பச்சை பட்டாணி - 2 மேசைக்கரண்டி
  • பச்சை, சிகப்பு குடை மிளகாய் - 2 மேசைக்கரண்டி
  • பச்சை மிளகாய் - 2
  • இஞ்சி - சிறு துண்டு
  • பூண்டு - 4 பல்
  • மிளகாய் தூள் - கால் தேக்கரண்டி
  • தனியா தூள் - அரை தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் - சிறிதளவு
  • சீரக தூள் - சிறிதளவு
  • கரம் மசாலா தூள் - கால் தேக்கரண்டி
  • மல்லி இலை - சிறிதளவு
  • உப்பு, எண்ணெய் - தேவையான அளவு


வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், காலிஃப்ளவர், குடைமிளகாய், பூண்டு, இஞ்சி எல்லாவற்றையும் பொடியாக நறுக்கி வைக்கவும்.
எண்ணெய் சூடனாதும் பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து பச்சை வாசம் போகும் வரையில் வதக்கவும்.
சிவந்ததும் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்
பிறகு தக்காளி மற்றும் காய் வகைகளை சேர்த்து வதக்கவும்.
காய் அரை வேக்காடானதும் உப்பு மற்றும் தூள் வகைகளை சேர்த்து மீண்டும் வதக்கவும்.
வெந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கி வைக்கவும்.
தோசை கல்லில் மிகவும் மெல்லிய தோசையாக வார்த்து அதன் மேல் சிறிதளவு மசாலாவை பரப்பவும். இதனை திருப்பி போடக் கூடாது. அதனால் தான் மிகவும் மெல்லியதாக தேய்ப்பது மிகவும் அவசியம்.
தோசையின் இரண்டு பக்கத்தையும் உள் புறமாக மடித்து நான்காக வெட்டி சட்னியுடன் பரிமாறவும். சுவையான செட்டிநாடு மசாலா தோசை தயார்.

செய்தி குறிப்பு


சிறுமி பலியானது கொலைக்குற்றத்துக்கு சமமானது: உயர்நீதிமன்றம்

பதிவு செய்த நாள் - July 27, 2012 1:06 pm
பேருந்து ஓட்டை வழியாக சிறுமி ஸ்ருதி தவறி விழுந்து பலியானது கொலை குற்றத்திற்கு சமமானது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை அருகே பள்ளிப் பேருந்தின் ஓட்டையில் விழுந்து சிறுமி ஸ்ருதி பலியான சம்பவம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது இந்த உத்தரவை அதிகாரிகள் பிறப்பித்தனர்.  இது தொடர்பான விசாரணையின்போது, கல்வி மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜராகினர் . பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் சபிதா, மெட்ரிக் பள்ளி இயக்குனர் செந்தமிழ் செல்வி, போக்குவரத்து ஆணையர் பிரபாகர் ராவ், பள்ளி கல்வித்துறை அதிகாரிகள், சியோன் பள்ளி நிர்வாகத்தினர் உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். பள்ளி பேருந்து பாதுகாப்பு குறித்து புதிய விதிமுறைகளை உருவாக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். சிறுமி பலியானது கொலை குற்றத்திற்கு சமமானது என்று கருத்து தெரிவித்த நீதிபதிகள் பள்ளி நிர்வாகத்தின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் கேள்வி எழுப்பினர். மேலும் உயிரிழந்த சிறுமி குடும்பத்திற்கு ரூ 50 ஆயிரம் வழங்க பள்ளி நிர்வாகத்திற்கு நீதிபதி உத்தரவிட்டார்.
சியோன் மெட்ரிக் பள்ளியில் படித்து வந்த  சிறுமி ஸ்ருதி,  பேருந்தில் இருந்த ஓட்டையில் தவறி விழுந்து நேற்று முன்தினம் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன் வந்து வழக்கு பதிவு செய்தது. இது தொடர்பாக கல்வி மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆஜராகவும் தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது.
அதிரடி சோதனை: சிறுமி ஸ்ருதியின் மரணத்தைத் தொடர்ந்து, சென்னையில் பள்ளி வாகனங்கள் மற்றும் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் செல்லும் ஆட்டோக்களில் போக்குவரத்து காவல்துறையினர் சோதனையைத் தீவிரப்படுத்தி உள்ளனர்.சென்னை தேனாம்பேட்டை பகுதியில், பள்ளி வளாகங்களுக்கு அருகில் சோதனையில் ஈடுபட்ட போலீசார், 5க்கும் மேற்பட்ட குழந்தைகளை ஏற்றிச்செல்லும் ஆட்டோக்கள் மீது தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டனர். நேற்று மாலை மட்டும் சென்னையில் 70க்கும் அதிகமான ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பறிமுதல் செய்யப்பட்ட ஆட்டோ ஓட்டுநர்களின் உரிமம், வாகனங்களின் உரிமம் ஆகியவற்றை ரத்து செய்யுமாறு, வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து 2வது நாளாக இன்றும் சோதனைகள் நடந்து வருகிறது. பள்ளி நிர்வாகங்களுடன், காவல்துறையினர் ஆலோசனையும் நடத்தவுள்ளனர். போலீசாரின் இந்த சோதனைகள் மக்களிடையே வரவேற்பை பெற்றிருந்தாலும், இது காலம் கடந்த நடவடிக்கை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

திவாரி மகன்தான் ரோகித் சேகர்: மரபணு சோதனை வெளியீடு

பதிவு செய்த நாள் - July 27, 2012 6:54 pm
காங்கிரஸ் மூத்த தலைவர் என்.டி.திவாரியின் மரபணு சோதனையில் ரோகித் சேகர் அவரது மகன் தான் என்பது உறுதியாகியுள்ளது. அவரது மரபணு பரிசோதனையின் முடிவை டெல்லி உயர் நீதிமன்றம் இன்று வெளியிட்டது.
89 வயதான என்.டி.திவாரி தனது தந்தை என்று உரிமை கோரி, ரோகித் என்பவர் கடந்த 2008 – ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கினை விசாரித்து வரும் டெல்லி உயர்நிதிமன்றம்என்.டி.திவாரியை மரபணு சோதனைக்கு உட்படுத்த உத்தரவிட்டது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் என்.டி.திவாரி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனை தொடர்ந்து அவர், மரபணு சோதனைக்கு தனது ரத்த மாதிரியை கடந்த மே மாதம் 29 – ம் தேதி அளித்தார்.
ஹைதராபாத்தில் உள்ள சோதனைக் கூடத்தில், என்.டி.திவாரி, ரோகித் மற்றும் அவரது தாயார் உஜ்ஜாவாலா ஆகியோரின்  ரத்த மாதிரி பரிசோதனை செய்யப்பட்டு, அதன் மருத்துவ அறிக்கை சீல் வைத்து நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.

கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளின் உற்பத்தி திறனை மேம்படுத்த ரூ 5.45 கோடி ஒதுக்கீடு

பதிவு செய்த நாள் - July 27, 2012 5:52 pm
நீலகிரி மாவட்டத்தில் 12 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளின் உற்பத்தி திறனை மேம்படுத்த 5 கோடியே ‌45 லட்சம் ரூபாய் மானியமாக வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
தமிழக அரசின் சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில், நீலகிரி மாவட்டத்திலுள்ள 15 தேயிலை தொழிற்சாலைகளில் 12 தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் தேயிலையின் அளவு மிகவும் குறைவாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. எனவே இந்த தொழிற்சாலைகளில் உற்பத்தி திறனை அதிகரிக்கவும், தேயிலை தரத்தினை மேம்படுத்தவும் மூலதன செலவாக 5 கோடியே 46 லட்ச ரூபாய் மானியமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இன்கோசர்வ், பழுதடைந்த கட்டடங்களை தனது சொந்த நிதியிலிருந்து  54 லட்ச ரூபாய் செலவில் பழுதுபார்க்கவும் அனுமதி அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
தொழிற்கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில் உறுப்பினராக உள்ள சிறு விவசாயிகளுக்கு பசுந்தேயிலையின் சந்தை விலை அடிப்படையில் கிலோ ஒன்றுக்கு 2 ரூபாய் வரை கூடுதலாக வழங்க 6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படை கைது செய்த 23 ராமேஸ்வரம் மீனவர்கள் விடுவிப்பு

பதிவு செய்த நாள் - July 27, 2012 1:54 pm
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 23 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது இலங்கையின் அனுராதபுரம் சிறையிலுள்ள அவர்களை விடுவிக்க தலைமன்னார் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். விடுவிக்கப்பட்ட மீனவர்கள் அனைவரையும் நாளை தமிழகம் அழைத்துவர இந்திய தூதரக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மீனவர்கள் விடுவிக்கப்பட்ட தகவல் கிடைத்தவுடன் அவர்களது உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். முன்னதாக இன்றுகாலை ராமேஸ்வரத்திலுள்ள மீன்துறை உதவி இயக்குனர் கார்த்திகேயனை மீனவர்கள் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.
கடந்த வாரம் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் பகுதி விசைப்படகு மீனவர்கள் 23 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. இதையடுத்து அவர்களை விடுவிக்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவும், வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவும் கோரிக்கை விடுத்திருந்தனர். இதைத் தொடர்ந்து தற்போது மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
sIMG_0001
sIMG_0002
தினகரன் நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில், “நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே மறுகால்குறிச்சி அய்யன் கோயிலைச் சேர்ந்தவர் வானுமாமலை (32) கூலி தொழில் செய்து வருகிறார்.  இவர் அவ்வப்போது டிராக்டரில் வீடு கட்டும் வேலையும் செய்வதுண்டு. ஒரு வாரத்திற்கு முன்பு நாங்குநேரி பெரிய குளத்தில் மணல் அள்ளியபோது போலீசார் அவரிடம மணல் அள்ள பணம் கேட்டதாகக் கூறப்படுகிறது.  இதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.  இதனால் போலீசாருக்கும் வானுமாமலைக்கும் இடையே மோதல் இருந்து வந்தது.
இந்நிலையில் நேற்று பிற்பகல் 3 மணிக்கு நான்கேநேரி இன்ஸ்பெக்டர் விஜயக்குமார் சாதாரண உடையில், மணல் கடத்தல் குறித்து விசாரிக்க மறுகால்குறிச்சிக்கு சென்றுள்ளார்.  அங்கு ஊர் அருகே, அய்யன் கோயில் மரத்தடியில் சிலருடன் வானுமாமலை பேசிக்கொண்டிருந்தார். போலீஸ் ஜீப்பைப் பார்த்தவுடன் வானுமாமலையுடன் பேசிக்கொண்டிருந்தவர்கள் ஓட்டம் பிடித்தனர்.  ஆனால் அவர் மட்டும் ஓடாமல் நின்று கொண்டிருந்தார்.
அவருடன் இன்ஸ்பெக்டர் விஜயக்குமார் பேசிக்கொண்டிருந்தார்.  அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.  அது மோதலாகவும் மாறியது.  அதேநேரத்தில் கோயிலுக்குள் சிலர் பேசிக்கொண்டிருந்தனர். சத்தம் கேட்டு வெளியில் வந்தபோது, வானுமாமலை மட்டும் குப்புற விழுந்து கிடந்தார்.  இன்ஸ்பெக்டர் போலீஸ் ஜீப்பில் ஏறி சென்று கொண்டிருந்தார்.  பொதுமக்களில் சிலர் வானுமாமலையைப் பார்த்தபோது அவர் நெஞ்சில் குண்டு காயத்துடன் இறந்து கிடந்தார்.   அப்போதுதான் போலீசார் சுட்டதில் அவர் இறந்தது தெரிய வந்தது.”
தினகரன் செய்தி ஓரளவுக்கு நியாயமாக, உண்மையைச் சார்ந்து அமைந்துள்ளது.  ஆனால் தினகரனின் அரசியல் சார்பு நிலையைப் பார்க்கையில் திமுக ஆட்சியில் இருந்தால் இப்படிச் செய்தியை தினகரன் வெளியிட்டிருக்குமா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
திமுக ஆட்சியில் இப்படி நடந்திருந்தால் தினகரனின் தலைப்பு “மணல் கொள்ளையன் சுட்டுக் கொலை” என்று இருந்திருக்கும். ”நாங்குநேரியைச் சேர்ந்த வானுமாமலை என்பவன், பல மாதங்களாக மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்ததால் அவனைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.   தனிப்படையினருக்கு வானுமாமலை மறுக்கால்குறிச்சியில் பதுங்கியிருப்பது குறித்து ரகசிய தகவல் வந்தது.  வானுமாமலையை கைது செய்ய இன்ஸ்பெக்டர் விஜயக்குமார் சென்றபோது, அவரை அரிவாளாளால் வானுமாமலை தாக்கியதில், விஜயக்குமாருக்கு பலத்த ரத்த காயம் ஏற்பட்டது. பாதுகாப்புக்காக தன் கைத்துப்பாக்கியை எடுத்து விஜயக்குமார் சுட்டபோது சம்பவ இடத்திலேயே வானுமாமலை உயிரிழந்தார். இது குறித்து, ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்றே தினகரன் செய்தி வெளியிட்டிருக்கும்.
தினத்தந்தியைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்.  தினத்தந்தியில் நேற்று வந்த செய்தி, “நெல்லை மாவட்டம் நாங்குநேரியை அடுத்த நாற்கர சாலை ஓரத்தில் மறுகால்குறிச்சி கிராமம் உள்ளது.  இந்த ஊரைச்சேர்ந்த தங்க ஆறுமுகம் என்பவருடைய மகன் முருகன் (வயது 29) ஒரு வழக்கு தொடர்பாக முருகனை நாங்குநேரி போலீசார் தேடி வந்தனர்.  நேற்று முன்தினம் முருகனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.  விசாரணையில் கிடைத்த தகவல்களின்படி இன்னும் சிலரிடம் விசாரணை நடத்துவதற்காக மறுகால்குறிச்சி கிராமத்துக்கு நேற்று மாலை நாங்குநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயக்குமார் தலைமையில் போலீசார் சென்றனர்.
sIMG_0004
அப்போது ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள அய்யன்கோயில் பகுதியில் சிலர் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அங்கு முருகனின் அண்ணன் வானுமாமலையும் (வயது 30) நின்று கொண்டிருந்தார்.  ஏற்கனவே தன்னுடைய தம்பியை  கைது செய்ததால் போலீசார் மீது அவர் ஆத்திரத்தில் இருந்தார்.
அந்த நேரத்தில் போலீசாரும் அங்கு வந்து, கும்பலாக நின்றவர்களிடம் விசாரணை நடத்தினர்.  முருகன் மீது கூறப்பட்டுள்ள புகார்கள் குறித்து அவருடைய அண்ணன் வானுமாமலையிடம் விசாரணை நடந்தது. போலீசாரின் கேள்விகளுக்கு வானுமாமலை சரியான பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
துப்பாக்கிச் சூட்டில் பலி
சற்று நேரத்தில் போலீசாருக்கும் வானுமமாலை உட்பட அங்கு நின்றவர்களுக்கும் இடையே பலத்த வாக்குவாதம் ஏற்பட்டது.  தகராறு முற்றியதால் போலீசார் அங்கிருந்து அவர்களை கலைந்து போகும்படி கூறினர். ஆனால் அவர்கள் போலீசார் மீது தாக்க முயற்சித்தனர்.
அப்போது போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயக்குமார், தற்காப்புக்காக கைத்துப்பாக்கியால் சுட்டார்.   குண்டு வானமாமலை நெஞ்சில் பாய்ந்தது.  அவர் அவர் அந்த இடத்திலேயே சுருண்டு கீழே விழுந்தார்.   மற்றவர்கள் அதிர்ச்சி அடைந்து நாலாபுறமும் சிதறி ஓடினர்.
குண்டுகாயம் அடைந்த வானமாமலை சம்பவ இடத்திலேயே பலியானார்.
இறுதியாக..
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மணல் கடத்தலுக்கும், துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கும் தொடர்பு இருக்கிறதா ? என்று தீவிர விசாரணை நடந்து வருகிறது.”
இந்த தினத்தந்தி செய்தியில், காவல்துறையினரின் தரப்பைத் தவிர ஏதாவது செய்தி இருக்கிறதா ?  காவல்துறையினர் சொல்லியதை அப்படியே ஒரு கமா ஃபுல்ஸ்டாப் மாறாமல் ஒப்பிக்க, தினத்தந்தி காவல்துறையின் செய்திக் குறிப்பேடா ? ஆனால், தினத்தந்தியின் வரலாறே இதுதான்.  காவல்துறையினர் தரும் செய்திகளை அப்படியே, கமா, ஃபுல்ஸ்டாப் மாறாமல் வெளியிடுவதுதான் தினத்தந்தி செய்தியாளர்களின் வேலை.  இதற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கிறது.   கள்ளத்தொடர்பு, பாலியல் ரீதியான குற்றங்கள், ஆபாசமான விஷயங்கள் குறித்து தினத்தந்தியில் எப்படி விரிவாகச் செய்திகள் வரும் என்பது வாசகர்கள் அறிந்ததே.   இப்படி விரிவான செய்திகளை வெளியிட காவல்துறையின் உதவி தேவையல்லவா ?  ஒரு கள்ளத்தொடர்பு காரணமாக ஒரு கொலை நடந்திருந்தால், “கொலைசெய்யப்பட்டவரோடு xxxx என்பவர் நீண்டகாலமாகவே கள்ளத்தொடர்பு வைத்திருந்தார். கணவர் வெளியூர் செல்கையில் இவர்கள் இருவரும் சல்லாபமாக இருந்து வந்துள்ளனர்” என்பது போன்ற செய்திகளை காவல்துறையினர்தானே தர முடியும் ?  குற்றவாளிகளிடம், காவல்துறையினர் அடித்து, சித்திரவதை செய்து, துன்புறுத்தி வாங்கும் பொய் வாக்குமூலங்களை அப்படியே வெளியிடுவதுதான் தினத்தந்தியின் ஊடக தர்மம்.
நடுநிலையாக செய்திகளை வெளியிடும் தினமணியும், இதற்கு விதிவிலக்கில்லாமலேயே செய்தி வெளியிட்டிருக்கிறது.
sIMG_0008
தினமணி செய்தியில், “நான்குனேரி அருகே உள்ள மறுகால்குறிச்சி அய்யன்கோவில் தெருவைச் சேர்ந்த தங்க ஆறுமுகம் மகன்கள் வானுமாமலை (32) முருகன் (29).  இருவரும் நான்குனேரி பெரியகுளத்தில் அனுமதியின்றி கரம்பை மண்ணை அள்ளி செங்கல் சூளைகளுக்கு விற்றுவந்தனர்.  இந்நிலையில் மணல் கடத்தல் தொடர்பாக முருகனை நான்குனேரி காவல்நிலைய ஆய்வாளர் விஜயக்குமார் திங்கள்கிழமை கைது செய்தார்.  இது தொடர்பாக வானுமாமலையை கைது செய்வதற்காக ஆய்வாளர் விஜயக்குமார் மற்றும் போலீசார் செவ்வாய்க்கிழமை மறுகால்குறிச்சிக்கு சென்றனர்.
அங்குள்ள அய்யன்கோவிலில் அமர்ந்து வானுமாமலையும் சிலரும் பேசிக்கொண்டிருந்தனராம்.  போலீசாரைப் பார்த்ததும் மற்றவர்கள் ஓடி விட்டதாகக் கூறப்படுகிறது.  அங்கேயே நின்றுகொண்டிருந்த வானுமாமலையை போலீசார் கைது செய்ய நெருங்கியுள்ளனர்.  அப்போது, ஆய்வாளருக்கும் வானுமாமலைக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாம்.  அந்த நேரத்தில் மறைவான இடத்தில் இருந்து அரிவாளோடு சிலர் ஓடிவந்தனராம்.  அவர்களை ஆய்வாளர் எச்சரித்துள்ளார்.  அதைப் பொருட்படுத்தாமல் அவர்கள் தொடர்ந்து நெருங்கியதால், வானுமாமலையை ஆய்வாளர் விஜயக்குமார் துப்பாக்கியால் சுட்டதாகக் கூறப்படுகிறது. (யாரோ சிலர் அரிவாளோடு ஓடி வந்தால், வானுமாமலையை ஏன் சுட வேண்டும்.  தினமணி நிருபர் தான் என்ன எழுதுகிறோம் என்பதை தெரிந்துதான் எழுதினாரா என்று தெரியவில்லை) இதில் பலத்த காயமடைந்த வானுமாமலை சம்பவ இடத்திலேயே இறந்தார்”
தினமலரைப் பற்றிச் சொல்லவா வேண்டும் ?
sIMG_0006
“நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே மறுகால்குறிச்சியிலுள்ள பெரியகுளத்தில், அனுமதியின்றி மண் அள்ளுவது தொடர்பாக இரு கோஷ்டிகளுக்கிடையே பிரச்சினை இருந்து வருகிறது.
இவ்வழக்கில் அதே கோஷ்டியைச் சேர்ந்த தங்க ஆறுமுகம் மகன் முருகனை, நாங்குநேரி போலீசார் சில நாட்களுக்குமுன் கைது செய்தனர்.  அப்போது, அவரது அண்ணன் வானமாமலை 32, தப்பியோடி விட்டார்.
அவரைப் பிடிப்பதற்காக நேற்று மாலை 3.30 மணிக்கு, நாங்குநேரி இன்ஸ்பெக்டர் விஜயக்குமார் போலீசாருடன் சென்றார்.  வானமாமலை, இன்ஸ்பெக்டரை அரிவாளால் தாக்கத் தொடங்கினார்.  இன்ஸ்பெக்டர் விஜயக்குமார், துப்பாக்கியால் வானமாமலையை நோக்கிச் சுட்டார்.  இதில் வானமாமலை அங்கேயே பலியானார்.”
தினமலர், இறந்துபோன வானமாமலைக்கு மாவோயிஸ்டுகளோடு தொடர்பு இருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது என்று சொல்லாமல் விட்டதுதான் ஆச்சர்யம்.
தமிழ் நாளேடுகள்தான் இப்படி பொறுப்பில்லாமல் நடந்து கொள்கின்றன என்றால், ஆங்கில நாளேடுகள், தமிழ் நாளேடுகளைத் தூக்கிச் சாப்பிட்டு விடுகின்றன.
டெக்கான் க்ரானிக்கிள் நாளேடு…
sIMG_0005
Sand Miner shot dead in police ‘encounter’

“An alleged illegal sand miner was killed in a police encounter near Nanguneri, in Tirunelveli district, on Tuesday.
Vanamamalai (32), son of Thanga Arumugam of Marugalkurichi, near Nanguneri, who faced several cases, including robbery and murder, challenged Nanguneri inspector Vijayakumar, who, along with two constables, went to interrogate him about a clash involving Vanamamalai and his rival group in connection with illegal sand mining from the local village tank, two days ago.
Vanamamalai refused to come for police enquiry and reportedly attacked the inspector with a sickle, injuring his hand. Mr Vijayakumar then opened fire, hitting Vanamamalai in the neck.
The police refrained from disclosing the details of the encounter by just saying that their immediate objective was to disperse the Marugalkurichi villagers who blocked the busy Tirunelveli-Kanyakumari national highway demanding action against Mr Vijayakumar.
According to the villagers, Vanamamalai was shot dead when he was chatting with his friends at Ayyan temple. His relatives, who had his body, asked how they could have got the body if it was an encounter.
Around 500 policemen, including special task force personnel, have been deployed at the spot.”
இரண்டாவது பத்தியைப் பாருங்கள்.   தங்க ஆறுமுகம் என்பவரின் மகன் வானமாமலை (32) மீது திருட்டு, கொலை உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.  அவர் நாங்குனேரி ஆய்வாளர் விஜயக்குமார் மற்றும் இரண்டு காவலர்களோடு, ஊர் குளத்தில் மண் எடுப்பது சம்பந்தமாக வானமாமலைக்கும் அவரது எதிர் கோஷ்டிக்கும் இரண்டு நாட்களுக்கு முன்னால் நடந்த மோதல் தொடர்பாக விசாரிக்கச் சென்றபோது, ஆய்வாளர் விஜயக்குமாருக்கு சவால் விடுத்துள்ளார்.
வானமாமலை விசாரணைக்கு வர மறுத்து இன்ஸ்பெக்டரை அரிவளால் தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில் இன்ஸ்பெக்டருக்கு கையில் காயம் ஏற்பட்டது.   இதன் பிறகு விஜயக்குமார் துப்பாக்கியால் சுட்டதில், வானமாமலைக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டது.
கன்னியாக்குமரி-திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையை மறித்து சாலை மறியலில் ஈடுபட்டு போராட்டம் நடத்தும் மக்களை அப்புறப்படுத்துவதே முதல் பணி என்பதால் காவல்துறையினர் என்கவுன்டர் தொடர்பாக எந்த விபரங்களையும் தர மறுத்து விட்டனர்.
ஊரில் தன் நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்தபோது வானமாமலை சுட்டுக் கொல்லப்பட்டார் என்று அந்தக் கிராமத்து மக்கள் தெரிவிக்கின்றனர்.”
போராட்டம் நடத்தும் மக்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளதால் காவல்துறையினர் விபரங்களை தெரிவிக்க மறுத்துவிட்டனர் என்றால், வானமாமலை மீது திருட்டு, கொலை உட்பட பல்வேறு வழக்குகள் இருந்தன என்பதை டெக்கான் கிரானிக்கிளின் இந்த நிருபர் எப்படிக் கண்டுபிடித்தார் ?  இன்ஸ்பெக்டர் விஜயக்குமாருக்கு கையில் காயம் ஏற்பட்டது என்பதை இந்த நிருபருக்கு யார் சொன்னது ?
இந்த நிருபரின் பெயர் அருளொளி.  அருளொளி என்று வைப்பதற்கு பதிலாக இருட்டுச்சாமி என்று பெயரை மாற்றிக் கொள்ளுங்கள்.  நீங்கள் எழுதிய எழுத்தில் ஒளியை விட இருளே நிறைந்திருக்கிறது.
இந்த அருளொளி பத்திரிக்கையாளர் வேலைபார்ப்பதை விட, திருநெல்வேலி சந்தையில் புளி வியாபாரம் செய்யலாம். இறந்து போன ஒரு மனிதனின் மேல் கொலை வழக்கு இருக்கிறது என்று எப்படி ஒரு பச்சைப் பொய்யை இந்த நிருபரால் சொல்ல முடிந்தது ?
டைம்ஸ் ஆப் இந்தியா, டெக்கான் நிருபரை தூக்கிச் சாப்பிட்டு விடுவார் போலிருக்கிறது.
sIMG_0007

Petrofac Jobs


Worley Parsons UAE Jobs


Below are the Key Positions:-

PMC Roles

1)      Project Manager  
2)      Engineering Manager  
3)      Commissioning Manager   
4)      Project Controls Manager  
5)      Construction Manager  
6)      Construction Manager  
7)      Construction Superintendent  
8)      Sr Planning Engineer  
9)      Sr Structural Engineer  
10)   Sr Pipeline Engineer  
11)   Sr Project Controls & Planning Engineer  
12)   Sr Electrical Engineer  

In-house Roles

For Abu Dhabi location:

1)      Senior Safety & Risk Engineer
2)      Lead Safety & Risk Engineer
3)      Sr Project Engineer
4)      Senior Cost Estimator
5)      Project Controls Manager

For Dubai Location:

1)      Coastal Modeller / Coastal Engineer
2)      Technical Manager – Water / Waste water
3)      Senior Marine Environmental Consultant

Interested forward your Cv’s to trichyexpress@gmail.com


first Indian CM to be invited by the Government of Japan


Gujarat Chief Minister Narendra Modi


INDIA : NEWS : Gujarat Chief Minister Narendra Modi has completed his four-day visit to Japan. Modi is the first Indian CM to be invited by the Government of Japan. The Gujarat CM had recently been to China where he got a similar red carpet welcome. The Gujarat Government claimed that after Modi’s China visit, Japanese leadership wanted to have closer relations with him.

Modi had a delegation level meeting with Yukio Edano, Minister for Economy, Trade and Industry, on various aspects of economy, industry, business and growing trade. He had discussed various innovative projects relating to renewable energy, infrastructure, tourism promotion, water management and other with the Japan’s Deputy Prime Minister.

He also had a wide ranging discussion with the Minister for Land, Infrastructure, Transport and Tourism especially on Metro Rail, high speed connectivity from Ahmedabad-Dholera-Bhavanagar, other infrastructure, tourism promotion, air connectivity between Tokyo and Ahmedabad as traffic and visits from Japan to Gujarat and vice-versa are on the rise.

Both leaders have agreed that there are wide ranging areas where Japan and Gujarat should collaborate and it will be beneficial to all. Modi also held a detailed discussion with ex-Prime Minister Shinzo Abe, who had initiated Delhi Freight Corridor and Delhi-Mumbai Industrial Corridor. He reiterated his continued support to promote investment in Gujarat and accepted the invitation from Modi to visit Gujarat.

Modi also had a meeting with President, MDs and CEOs of top Japanese industries like Sumitomo Corporation, IHI Corporation, Mitsubishi Corporation, Hitachi, Itochu, Bank of Tokyo, Mizuho Financial Group, etc. and discussed their plan/ proposals for investment in Gujarat. He invited them to participate in the forthcoming Vibrant Gujarat Global Investor Summit to be held in January, 2013 at Mahatma Mandir, Gandhinagar.

Medical Jobs

Hiring Specialist/ Consultant Doctors

Hiring Specialist/ Consultant Doctors Holding Valid UAE MOH License for a Leading Multi Specialty Healthcare Group in Sharjah, United Arab Emirates. 

Note : Apply only if you acquire a Valid UAE MOH License. 
1. Arab Gynecologist -  Female -  UAE MOH License : Specialist A or Consultant only - 5+ Years - MD/ MS/ DNB/ DM
2. Neonatologist -  Any Nationality -  Any Gender - UAE MOH License : Specialist or Consultant - 5+ Years - MD/ MS/ DNB/ DM
3. NICU Registrar - Any Nationality -  Any Gender -  UAE MOH License : Specialist B or GP - 5+ Years - MD/ MS/ DNB/ DM
4. Arab Pediatrician - Any Gender - UAE MOH License : Specialist A or Consultant only - 5+ Years - MD/ MS/ DNB/ DM
5. Endocrinologist -  Indian - Any Gender -  UAE MOH License : Specialist A or Consultant only - 5+ Years - MD/ MS/ DNB/ DM
Professionals interested in exploring this opportunity kindly mail your updated profiles to betsy@medicalnaukri.com with the scanned copies of all the relevant documents immediately.


ENT Surgeon 

We are hiring ENT Surgeon for Qatar

Position : ENT Surgeon
Qualification : MBBS,MS
Location : Qatar
Excellent career growth opportunity.

Applicants Should have MOH license/Willing to appear

Professionals interested in exploring this opportunitykindly mail your updated CV to mahesh@medicalnaukri.com

ENT Surgeon Jobs Kuwait:

Position : ENT Surgeon
Qualification : MBBS,MS
Location : Kuwait

Excellent career growth opportunity.

Applicants Should have MOH license/Willing to appear

Professionals interested in exploring this opportunity kindly mail your updated CV to mahesh@medicalnaukri.com

NICU Registrar Sharjah 

Requirements for Jobs:NICU Registrar Sharjah:

Position :NICU Registrar
Qualification : MBBS,DCH/MD/DNB
Location : Sharjah,UAE

Excellent career growth opportunity.

Applicants Should have MOH license.

Professionals interested in exploring this opportunity kindly mail your updated CV to mahesh@medicalnaukri.com

Endocrinologist Sharjah 

Requirements for Jobs:Endocrinologist Sharjah:

Position :Endocrinologist
Qualification :MBBS,MD/DNB/DM
Location : Sharjah,UAE

Excellent career growth opportunity.

Applicants Should have MOH license.

Professionals interested in exploring this opportunity kindly mail your updated CV to mahesh@medicalnaukri.com

Gynecologist UAE 

Requirements for Jobs:Gynecologist UAE:

Position :Gynecologist
Qualification :MBBS,MD/DNB
Location : Sharjah,UAE

Excellent career growth opportunity.

Applicants Should have MOH license and Knowledge of Arabic

Professionals interested in exploring this opportunity kindly mail your updated CV to mahesh@medicalnaukri.com

IMMEDIATE PMT JOBS OPENING (Malaysia)


IMMEDIATE PMT JOBS OPENING NOW IN (BORNEO) SARAWAK AS LISTED BELOW:

Interested Candidates are invited to submit their application with details resumes stating current & expected salary with their availability along together with a recent photo attach in their CV, and email to (hr.mulufrontier@gmail.com) Tel:+6085-406062, Fax:+6085-406061.

1.0 SCOPE OF WORK:
2.0 Engineering, Procurement, Construction & Commissioning (EPCC) of Topsides
Project Location: East Malaysia, Sarawak. Tentative Date to Mob: August, 2012
Fast Track Requirement Drive. (FTRD)


3.1.1 PROJECT MANAGER
The candidate shall be responsible in managing the overall WORKS.
The candidate must be engineering graduate degree with minimum 10 years working experience in engineering and construction of oil and gas facilities in general, and in engineering and construction of offshore platforms, in particular. He/she must held the position of Project Manager for at least 2 similar projects. He should have the ability to manage interfaces between various project phases including design, procurement, construction, offshore transportation & installation, hook-up and commissioning. He should also have the ability to organize and direct construction management activities so as to meet the schedule, quality and safety requirements of the projects.

3.1.2 PROJECT ENGINEER
3.1.3 FABRICATION MANAGER
3.1.4 ENGINEERING MANAGER
3.1.5 PLANNING ENGINEER
3.1.6 CONTRACT ENGINEER/ADMINISTRATOR
3.1.7 QA/QC MANAGER
3.1.8 QA/QC ENGINEER
3.1.9 HSE ENGINEER
3.1.10 PROCUREMENT MANAGER
3.1.11 HOOK-UP MANAGER
3.1.12 COMMISSIONING MANAGER
3.2 ENGINERRING TEAM
3.2.1 ENGINEER
3.2.2 DRAFTING PERSONNEL
3.3 PROCUREMENT TEAM
3.3.2 EXPEDITOR
3.3.3 MATERIAL COORDINATOR/ CONTROLLER
3.4 FABRICATION TEAM
3.4.1 CONTRUCTION SUPERINTENDENT(S)
3.4.2 CONSTRUCTION ENGINEERS (STRUCTURAL, MECHANICAL/PIPING, E&I, ETC)
3.4.3 LOAD-OUT SPECIALIST
3.4.4 WELDING ENGINEER
3.4.5 QUANTITY SURVEYOR
3.4.6 SCHEDULER/PLANNER
3.4.7 PROJECT COST CONTROLLER
3.4.8 SAFETY OFFICER
3.4.9 QC INSPECTOR(S)
3.4.10 DIMENSIONAL SURVEYOR
3.5 Installation Team (scope by other)
3.6 Hook-Up and Commissioning Team
3.6.1 OPERATION TEAM LEADER
3.6.2 WORKPACK TEAM LEADER
3.6.3 COMMISSIONING ENGINEERS (ALL DISCIPLINES)
3.6.4 COMMISSIONING SUPERVISOR(S)
3.6.5 SAFETY OFFICER
3.6.6 MATERIAL COORDINATOR