- பாகற்காய் - ஒன்று
- கடலை மாவு - ஒரு மேசைக்கரண்டி
- அரிசி மாவு - 1 அல்லது 1 1/2 மேசைக்கரண்டி
- உப்பு
- மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
- மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
- புளிக்கரைசல் / எலுமிச்சை சாறு - 2 மேசைக்கரண்டி
- கறிவேப்பிலை - சிறிது
- எண்ணெய் - தேவைக்கு
பாகற்காயை சுத்தம் செய்து வட்ட வட்டமாக நறுக்கி வைக்கவும்.
| |
இதில் மாவு, தூள் எல்லாம் சேர்த்து பிரட்டவும்.
| |
பின் எலுமிச்சை சாறு அல்லது புளிக்கரைசல் சேர்த்து பிரட்டவும். தேவைக்கு சிறிது நீர் சேர்க்கலாம், நீர்த்து விட கூடாது, மாவு காயில் ஒட்டும் பதத்தில் இருந்தால் போதும்.
| |
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பொரித்து எடுக்கவும். பொரிக்கும் போது உடன் சிறிது கறிவேப்பிலை சேர்த்து பொரித்தால் மணமாக இருக்கும்.
|
கலவை பாகற்காயில் ஒன்றுபோல் கலக்குமா என சந்தேகம் இருந்தால் மாவு, தூள் எல்லாம் ஒன்றாக கலந்து விட்டு பின் பாகற்காயை பிரட்டி வைக்கலாம். விரும்பினால் அரை தேக்கரண்டி சர்க்கரை சேர்க்கலாம்.