Pages

Sunday, 29 July 2012

பூண்டு தொக்கு



 
  • முழு பூண்டு - 2
  • தக்காளி - 3
  • வெங்காயம் - 3
  • பச்சை மிளகாய் - 5
  • மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
  • மல்லி தூள் - 1 1/2 தேக்கரண்டி
  • மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
  • இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
  • எண்ணெய், உப்பு - தேவையான அளவு
  • கடுகு, உளுந்து, வெந்தயம், சீரகம் - தாளிக்க


பூண்டு, இஞ்சி, வெங்காயத்தை தோல் உரித்து சிறியதாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும். தக்காளி மற்றும் கொத்தமல்லி தழையை சிறியதாக நறுக்கி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானவுடன் இஞ்சி மற்றும் பூண்டை போட்டு பிரவுன் நிறம் வரும் வரை பொரித்து எடுக்கவும். அதை தனியாக எடுத்து வைக்கவும்.
வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்த உடன் தாளிக்க கொடுத்தவற்றை போட்டு தாளிக்கவும். பின் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
வெங்காயம் சற்றே வதங்கியவுடன் மஞ்சள் தூள், மல்லி தூள், மிளகாய் தூள் சேர்த்து கிளறவும்.
வெங்காயம் நன்றாக வதங்கி பொன்னிறமானதும் பொரித்து வைத்திருக்கும், பூண்டு + இஞ்சியை சேர்த்து கிளறவும்.
பின் தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி சேர்த்து இரண்டு நிமிடம் ஆன பின் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும்.
தக்காளி குழைந்து வெந்த உடன், கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

இந்த பூண்டு தொக்கு, சாதம், சப்பாத்தி, இட்லி, தோசை அனைத்திற்கும் ஏற்றது. குழம்பாக வேண்டுமென்றால், இறுதியில் சற்றே தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். இந்த முறையில் பூண்டு தொக்கு செய்யும் போது புளி சேர்க்க வேண்டியதில்லை.

0 comments:

Post a Comment