சிறுமி பலியானது கொலைக்குற்றத்துக்கு சமமானது: உயர்நீதிமன்றம்
பதிவு செய்த நாள் - July 27, 2012 1:06 pm
பேருந்து ஓட்டை வழியாக சிறுமி ஸ்ருதி தவறி விழுந்து பலியானது கொலை குற்றத்திற்கு சமமானது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை அருகே பள்ளிப் பேருந்தின் ஓட்டையில் விழுந்து சிறுமி ஸ்ருதி பலியான சம்பவம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது இந்த உத்தரவை அதிகாரிகள் பிறப்பித்தனர். இது தொடர்பான விசாரணையின்போது, கல்வி மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜராகினர் . பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் சபிதா, மெட்ரிக் பள்ளி இயக்குனர் செந்தமிழ் செல்வி, போக்குவரத்து ஆணையர் பிரபாகர் ராவ், பள்ளி கல்வித்துறை அதிகாரிகள், சியோன் பள்ளி நிர்வாகத்தினர் உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். பள்ளி பேருந்து பாதுகாப்பு குறித்து புதிய விதிமுறைகளை உருவாக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். சிறுமி பலியானது கொலை குற்றத்திற்கு சமமானது என்று கருத்து தெரிவித்த நீதிபதிகள் பள்ளி நிர்வாகத்தின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் கேள்வி எழுப்பினர். மேலும் உயிரிழந்த சிறுமி குடும்பத்திற்கு ரூ 50 ஆயிரம் வழங்க பள்ளி நிர்வாகத்திற்கு நீதிபதி உத்தரவிட்டார்.
சியோன் மெட்ரிக் பள்ளியில் படித்து வந்த சிறுமி ஸ்ருதி, பேருந்தில் இருந்த ஓட்டையில் தவறி விழுந்து நேற்று முன்தினம் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன் வந்து வழக்கு பதிவு செய்தது. இது தொடர்பாக கல்வி மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆஜராகவும் தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது.
அதிரடி சோதனை: சிறுமி ஸ்ருதியின் மரணத்தைத் தொடர்ந்து, சென்னையில் பள்ளி வாகனங்கள் மற்றும் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் செல்லும் ஆட்டோக்களில் போக்குவரத்து காவல்துறையினர் சோதனையைத் தீவிரப்படுத்தி உள்ளனர்.சென்னை தேனாம்பேட்டை பகுதியில், பள்ளி வளாகங்களுக்கு அருகில் சோதனையில் ஈடுபட்ட போலீசார், 5க்கும் மேற்பட்ட குழந்தைகளை ஏற்றிச்செல்லும் ஆட்டோக்கள் மீது தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டனர். நேற்று மாலை மட்டும் சென்னையில் 70க்கும் அதிகமான ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பறிமுதல் செய்யப்பட்ட ஆட்டோ ஓட்டுநர்களின் உரிமம், வாகனங்களின் உரிமம் ஆகியவற்றை ரத்து செய்யுமாறு, வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து 2வது நாளாக இன்றும் சோதனைகள் நடந்து வருகிறது. பள்ளி நிர்வாகங்களுடன், காவல்துறையினர் ஆலோசனையும் நடத்தவுள்ளனர். போலீசாரின் இந்த சோதனைகள் மக்களிடையே வரவேற்பை பெற்றிருந்தாலும், இது காலம் கடந்த நடவடிக்கை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
திவாரி மகன்தான் ரோகித் சேகர்: மரபணு சோதனை வெளியீடு
பதிவு செய்த நாள் - July 27, 2012 6:54 pm
காங்கிரஸ் மூத்த தலைவர் என்.டி.திவாரியின் மரபணு சோதனையில் ரோகித் சேகர் அவரது மகன் தான் என்பது உறுதியாகியுள்ளது. அவரது மரபணு பரிசோதனையின் முடிவை டெல்லி உயர் நீதிமன்றம் இன்று வெளியிட்டது.
89 வயதான என்.டி.திவாரி தனது தந்தை என்று உரிமை கோரி, ரோகித் என்பவர் கடந்த 2008 – ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கினை விசாரித்து வரும் டெல்லி உயர்நிதிமன்றம்என்.டி.திவாரியை மரபணு சோதனைக்கு உட்படுத்த உத்தரவிட்டது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் என்.டி.திவாரி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனை தொடர்ந்து அவர், மரபணு சோதனைக்கு தனது ரத்த மாதிரியை கடந்த மே மாதம் 29 – ம் தேதி அளித்தார்.
ஹைதராபாத்தில் உள்ள சோதனைக் கூடத்தில், என்.டி.திவாரி, ரோகித் மற்றும் அவரது தாயார் உஜ்ஜாவாலா ஆகியோரின் ரத்த மாதிரி பரிசோதனை செய்யப்பட்டு, அதன் மருத்துவ அறிக்கை சீல் வைத்து நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.
கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளின் உற்பத்தி திறனை மேம்படுத்த ரூ 5.45 கோடி ஒதுக்கீடு
பதிவு செய்த நாள் - July 27, 2012 5:52 pm
நீலகிரி மாவட்டத்தில் 12 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளின் உற்பத்தி திறனை மேம்படுத்த 5 கோடியே 45 லட்சம் ரூபாய் மானியமாக வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
தமிழக அரசின் சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில், நீலகிரி மாவட்டத்திலுள்ள 15 தேயிலை தொழிற்சாலைகளில் 12 தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் தேயிலையின் அளவு மிகவும் குறைவாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. எனவே இந்த தொழிற்சாலைகளில் உற்பத்தி திறனை அதிகரிக்கவும், தேயிலை தரத்தினை மேம்படுத்தவும் மூலதன செலவாக 5 கோடியே 46 லட்ச ரூபாய் மானியமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இன்கோசர்வ், பழுதடைந்த கட்டடங்களை தனது சொந்த நிதியிலிருந்து 54 லட்ச ரூபாய் செலவில் பழுதுபார்க்கவும் அனுமதி அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
தொழிற்கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில் உறுப்பினராக உள்ள சிறு விவசாயிகளுக்கு பசுந்தேயிலையின் சந்தை விலை அடிப்படையில் கிலோ ஒன்றுக்கு 2 ரூபாய் வரை கூடுதலாக வழங்க 6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடற்படை கைது செய்த 23 ராமேஸ்வரம் மீனவர்கள் விடுவிப்பு
பதிவு செய்த நாள் - July 27, 2012 1:54 pm
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 23 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது இலங்கையின் அனுராதபுரம் சிறையிலுள்ள அவர்களை விடுவிக்க தலைமன்னார் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். விடுவிக்கப்பட்ட மீனவர்கள் அனைவரையும் நாளை தமிழகம் அழைத்துவர இந்திய தூதரக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மீனவர்கள் விடுவிக்கப்பட்ட தகவல் கிடைத்தவுடன் அவர்களது உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். முன்னதாக இன்றுகாலை ராமேஸ்வரத்திலுள்ள மீன்துறை உதவி இயக்குனர் கார்த்திகேயனை மீனவர்கள் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.
கடந்த வாரம் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் பகுதி விசைப்படகு மீனவர்கள் 23 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. இதையடுத்து அவர்களை விடுவிக்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவும், வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவும் கோரிக்கை விடுத்திருந்தனர். இதைத் தொடர்ந்து தற்போது மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
தினகரன் நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில், “நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே மறுகால்குறிச்சி அய்யன் கோயிலைச் சேர்ந்தவர் வானுமாமலை (32) கூலி தொழில் செய்து வருகிறார். இவர் அவ்வப்போது டிராக்டரில் வீடு கட்டும் வேலையும் செய்வதுண்டு. ஒரு வாரத்திற்கு முன்பு நாங்குநேரி பெரிய குளத்தில் மணல் அள்ளியபோது போலீசார் அவரிடம மணல் அள்ள பணம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் போலீசாருக்கும் வானுமாமலைக்கும் இடையே மோதல் இருந்து வந்தது.
இந்நிலையில் நேற்று பிற்பகல் 3 மணிக்கு நான்கேநேரி இன்ஸ்பெக்டர் விஜயக்குமார் சாதாரண உடையில், மணல் கடத்தல் குறித்து விசாரிக்க மறுகால்குறிச்சிக்கு சென்றுள்ளார். அங்கு ஊர் அருகே, அய்யன் கோயில் மரத்தடியில் சிலருடன் வானுமாமலை பேசிக்கொண்டிருந்தார். போலீஸ் ஜீப்பைப் பார்த்தவுடன் வானுமாமலையுடன் பேசிக்கொண்டிருந்தவர்கள் ஓட்டம் பிடித்தனர். ஆனால் அவர் மட்டும் ஓடாமல் நின்று கொண்டிருந்தார்.
அவருடன் இன்ஸ்பெக்டர் விஜயக்குமார் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அது மோதலாகவும் மாறியது. அதேநேரத்தில் கோயிலுக்குள் சிலர் பேசிக்கொண்டிருந்தனர். சத்தம் கேட்டு வெளியில் வந்தபோது, வானுமாமலை மட்டும் குப்புற விழுந்து கிடந்தார். இன்ஸ்பெக்டர் போலீஸ் ஜீப்பில் ஏறி சென்று கொண்டிருந்தார். பொதுமக்களில் சிலர் வானுமாமலையைப் பார்த்தபோது அவர் நெஞ்சில் குண்டு காயத்துடன் இறந்து கிடந்தார். அப்போதுதான் போலீசார் சுட்டதில் அவர் இறந்தது தெரிய வந்தது.”
தினகரன் செய்தி ஓரளவுக்கு நியாயமாக, உண்மையைச் சார்ந்து அமைந்துள்ளது. ஆனால் தினகரனின் அரசியல் சார்பு நிலையைப் பார்க்கையில் திமுக ஆட்சியில் இருந்தால் இப்படிச் செய்தியை தினகரன் வெளியிட்டிருக்குமா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
திமுக ஆட்சியில் இப்படி நடந்திருந்தால் தினகரனின் தலைப்பு “மணல் கொள்ளையன் சுட்டுக் கொலை” என்று இருந்திருக்கும். ”நாங்குநேரியைச் சேர்ந்த வானுமாமலை என்பவன், பல மாதங்களாக மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்ததால் அவனைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினருக்கு வானுமாமலை மறுக்கால்குறிச்சியில் பதுங்கியிருப்பது குறித்து ரகசிய தகவல் வந்தது. வானுமாமலையை கைது செய்ய இன்ஸ்பெக்டர் விஜயக்குமார் சென்றபோது, அவரை அரிவாளாளால் வானுமாமலை தாக்கியதில், விஜயக்குமாருக்கு பலத்த ரத்த காயம் ஏற்பட்டது. பாதுகாப்புக்காக தன் கைத்துப்பாக்கியை எடுத்து விஜயக்குமார் சுட்டபோது சம்பவ இடத்திலேயே வானுமாமலை உயிரிழந்தார். இது குறித்து, ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்றே தினகரன் செய்தி வெளியிட்டிருக்கும்.
தினத்தந்தியைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். தினத்தந்தியில் நேற்று வந்த செய்தி, “நெல்லை மாவட்டம் நாங்குநேரியை அடுத்த நாற்கர சாலை ஓரத்தில் மறுகால்குறிச்சி கிராமம் உள்ளது. இந்த ஊரைச்சேர்ந்த தங்க ஆறுமுகம் என்பவருடைய மகன் முருகன் (வயது 29) ஒரு வழக்கு தொடர்பாக முருகனை நாங்குநேரி போலீசார் தேடி வந்தனர். நேற்று முன்தினம் முருகனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் கிடைத்த தகவல்களின்படி இன்னும் சிலரிடம் விசாரணை நடத்துவதற்காக மறுகால்குறிச்சி கிராமத்துக்கு நேற்று மாலை நாங்குநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயக்குமார் தலைமையில் போலீசார் சென்றனர்.
அப்போது ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள அய்யன்கோயில் பகுதியில் சிலர் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அங்கு முருகனின் அண்ணன் வானுமாமலையும் (வயது 30) நின்று கொண்டிருந்தார். ஏற்கனவே தன்னுடைய தம்பியை கைது செய்ததால் போலீசார் மீது அவர் ஆத்திரத்தில் இருந்தார்.
அந்த நேரத்தில் போலீசாரும் அங்கு வந்து, கும்பலாக நின்றவர்களிடம் விசாரணை நடத்தினர். முருகன் மீது கூறப்பட்டுள்ள புகார்கள் குறித்து அவருடைய அண்ணன் வானுமாமலையிடம் விசாரணை நடந்தது. போலீசாரின் கேள்விகளுக்கு வானுமாமலை சரியான பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
துப்பாக்கிச் சூட்டில் பலி
சற்று நேரத்தில் போலீசாருக்கும் வானுமமாலை உட்பட அங்கு நின்றவர்களுக்கும் இடையே பலத்த வாக்குவாதம் ஏற்பட்டது. தகராறு முற்றியதால் போலீசார் அங்கிருந்து அவர்களை கலைந்து போகும்படி கூறினர். ஆனால் அவர்கள் போலீசார் மீது தாக்க முயற்சித்தனர்.
அப்போது போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயக்குமார், தற்காப்புக்காக கைத்துப்பாக்கியால் சுட்டார். குண்டு வானமாமலை நெஞ்சில் பாய்ந்தது. அவர் அவர் அந்த இடத்திலேயே சுருண்டு கீழே விழுந்தார். மற்றவர்கள் அதிர்ச்சி அடைந்து நாலாபுறமும் சிதறி ஓடினர்.
குண்டுகாயம் அடைந்த வானமாமலை சம்பவ இடத்திலேயே பலியானார்.
இறுதியாக..
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மணல் கடத்தலுக்கும், துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கும் தொடர்பு இருக்கிறதா ? என்று தீவிர விசாரணை நடந்து வருகிறது.”
இந்த தினத்தந்தி செய்தியில், காவல்துறையினரின் தரப்பைத் தவிர ஏதாவது செய்தி இருக்கிறதா ? காவல்துறையினர் சொல்லியதை அப்படியே ஒரு கமா ஃபுல்ஸ்டாப் மாறாமல் ஒப்பிக்க, தினத்தந்தி காவல்துறையின் செய்திக் குறிப்பேடா ? ஆனால், தினத்தந்தியின் வரலாறே இதுதான். காவல்துறையினர் தரும் செய்திகளை அப்படியே, கமா, ஃபுல்ஸ்டாப் மாறாமல் வெளியிடுவதுதான் தினத்தந்தி செய்தியாளர்களின் வேலை. இதற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கிறது. கள்ளத்தொடர்பு, பாலியல் ரீதியான குற்றங்கள், ஆபாசமான விஷயங்கள் குறித்து தினத்தந்தியில் எப்படி விரிவாகச் செய்திகள் வரும் என்பது வாசகர்கள் அறிந்ததே. இப்படி விரிவான செய்திகளை வெளியிட காவல்துறையின் உதவி தேவையல்லவா ? ஒரு கள்ளத்தொடர்பு காரணமாக ஒரு கொலை நடந்திருந்தால், “கொலைசெய்யப்பட்டவரோடு xxxx என்பவர் நீண்டகாலமாகவே கள்ளத்தொடர்பு வைத்திருந்தார். கணவர் வெளியூர் செல்கையில் இவர்கள் இருவரும் சல்லாபமாக இருந்து வந்துள்ளனர்” என்பது போன்ற செய்திகளை காவல்துறையினர்தானே தர முடியும் ? குற்றவாளிகளிடம், காவல்துறையினர் அடித்து, சித்திரவதை செய்து, துன்புறுத்தி வாங்கும் பொய் வாக்குமூலங்களை அப்படியே வெளியிடுவதுதான் தினத்தந்தியின் ஊடக தர்மம்.
நடுநிலையாக செய்திகளை வெளியிடும் தினமணியும், இதற்கு விதிவிலக்கில்லாமலேயே செய்தி வெளியிட்டிருக்கிறது.
தினமணி செய்தியில், “நான்குனேரி அருகே உள்ள மறுகால்குறிச்சி அய்யன்கோவில் தெருவைச் சேர்ந்த தங்க ஆறுமுகம் மகன்கள் வானுமாமலை (32) முருகன் (29). இருவரும் நான்குனேரி பெரியகுளத்தில் அனுமதியின்றி கரம்பை மண்ணை அள்ளி செங்கல் சூளைகளுக்கு விற்றுவந்தனர். இந்நிலையில் மணல் கடத்தல் தொடர்பாக முருகனை நான்குனேரி காவல்நிலைய ஆய்வாளர் விஜயக்குமார் திங்கள்கிழமை கைது செய்தார். இது தொடர்பாக வானுமாமலையை கைது செய்வதற்காக ஆய்வாளர் விஜயக்குமார் மற்றும் போலீசார் செவ்வாய்க்கிழமை மறுகால்குறிச்சிக்கு சென்றனர்.
அங்குள்ள அய்யன்கோவிலில் அமர்ந்து வானுமாமலையும் சிலரும் பேசிக்கொண்டிருந்தனராம். போலீசாரைப் பார்த்ததும் மற்றவர்கள் ஓடி விட்டதாகக் கூறப்படுகிறது. அங்கேயே நின்றுகொண்டிருந்த வானுமாமலையை போலீசார் கைது செய்ய நெருங்கியுள்ளனர். அப்போது, ஆய்வாளருக்கும் வானுமாமலைக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாம். அந்த நேரத்தில் மறைவான இடத்தில் இருந்து அரிவாளோடு சிலர் ஓடிவந்தனராம். அவர்களை ஆய்வாளர் எச்சரித்துள்ளார். அதைப் பொருட்படுத்தாமல் அவர்கள் தொடர்ந்து நெருங்கியதால், வானுமாமலையை ஆய்வாளர் விஜயக்குமார் துப்பாக்கியால் சுட்டதாகக் கூறப்படுகிறது. (யாரோ சிலர் அரிவாளோடு ஓடி வந்தால், வானுமாமலையை ஏன் சுட வேண்டும். தினமணி நிருபர் தான் என்ன எழுதுகிறோம் என்பதை தெரிந்துதான் எழுதினாரா என்று தெரியவில்லை) இதில் பலத்த காயமடைந்த வானுமாமலை சம்பவ இடத்திலேயே இறந்தார்”
தினமலரைப் பற்றிச் சொல்லவா வேண்டும் ?
“நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே மறுகால்குறிச்சியிலுள்ள பெரியகுளத்தில், அனுமதியின்றி மண் அள்ளுவது தொடர்பாக இரு கோஷ்டிகளுக்கிடையே பிரச்சினை இருந்து வருகிறது.
இவ்வழக்கில் அதே கோஷ்டியைச் சேர்ந்த தங்க ஆறுமுகம் மகன் முருகனை, நாங்குநேரி போலீசார் சில நாட்களுக்குமுன் கைது செய்தனர். அப்போது, அவரது அண்ணன் வானமாமலை 32, தப்பியோடி விட்டார்.
அவரைப் பிடிப்பதற்காக நேற்று மாலை 3.30 மணிக்கு, நாங்குநேரி இன்ஸ்பெக்டர் விஜயக்குமார் போலீசாருடன் சென்றார். வானமாமலை, இன்ஸ்பெக்டரை அரிவாளால் தாக்கத் தொடங்கினார். இன்ஸ்பெக்டர் விஜயக்குமார், துப்பாக்கியால் வானமாமலையை நோக்கிச் சுட்டார். இதில் வானமாமலை அங்கேயே பலியானார்.”
தினமலர், இறந்துபோன வானமாமலைக்கு மாவோயிஸ்டுகளோடு தொடர்பு இருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது என்று சொல்லாமல் விட்டதுதான் ஆச்சர்யம்.
தமிழ் நாளேடுகள்தான் இப்படி பொறுப்பில்லாமல் நடந்து கொள்கின்றன என்றால், ஆங்கில நாளேடுகள், தமிழ் நாளேடுகளைத் தூக்கிச் சாப்பிட்டு விடுகின்றன.
டெக்கான் க்ரானிக்கிள் நாளேடு…
Sand Miner shot dead in police ‘encounter’
“An alleged illegal sand miner was killed in a police encounter near Nanguneri, in Tirunelveli district, on Tuesday.
Vanamamalai (32), son of Thanga Arumugam of Marugalkurichi, near Nanguneri, who faced several cases, including robbery and murder, challenged Nanguneri inspector Vijayakumar, who, along with two constables, went to interrogate him about a clash involving Vanamamalai and his rival group in connection with illegal sand mining from the local village tank, two days ago.
Vanamamalai refused to come for police enquiry and reportedly attacked the inspector with a sickle, injuring his hand. Mr Vijayakumar then opened fire, hitting Vanamamalai in the neck.
The police refrained from disclosing the details of the encounter by just saying that their immediate objective was to disperse the Marugalkurichi villagers who blocked the busy Tirunelveli-Kanyakumari national highway demanding action against Mr Vijayakumar.
According to the villagers, Vanamamalai was shot dead when he was chatting with his friends at Ayyan temple. His relatives, who had his body, asked how they could have got the body if it was an encounter.
Around 500 policemen, including special task force personnel, have been deployed at the spot.”
இரண்டாவது பத்தியைப் பாருங்கள். தங்க ஆறுமுகம் என்பவரின் மகன் வானமாமலை (32) மீது திருட்டு, கொலை உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவர் நாங்குனேரி ஆய்வாளர் விஜயக்குமார் மற்றும் இரண்டு காவலர்களோடு, ஊர் குளத்தில் மண் எடுப்பது சம்பந்தமாக வானமாமலைக்கும் அவரது எதிர் கோஷ்டிக்கும் இரண்டு நாட்களுக்கு முன்னால் நடந்த மோதல் தொடர்பாக விசாரிக்கச் சென்றபோது, ஆய்வாளர் விஜயக்குமாருக்கு சவால் விடுத்துள்ளார்.
வானமாமலை விசாரணைக்கு வர மறுத்து இன்ஸ்பெக்டரை அரிவளால் தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில் இன்ஸ்பெக்டருக்கு கையில் காயம் ஏற்பட்டது. இதன் பிறகு விஜயக்குமார் துப்பாக்கியால் சுட்டதில், வானமாமலைக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டது.
கன்னியாக்குமரி-திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையை மறித்து சாலை மறியலில் ஈடுபட்டு போராட்டம் நடத்தும் மக்களை அப்புறப்படுத்துவதே முதல் பணி என்பதால் காவல்துறையினர் என்கவுன்டர் தொடர்பாக எந்த விபரங்களையும் தர மறுத்து விட்டனர்.
ஊரில் தன் நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்தபோது வானமாமலை சுட்டுக் கொல்லப்பட்டார் என்று அந்தக் கிராமத்து மக்கள் தெரிவிக்கின்றனர்.”
போராட்டம் நடத்தும் மக்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளதால் காவல்துறையினர் விபரங்களை தெரிவிக்க மறுத்துவிட்டனர் என்றால், வானமாமலை மீது திருட்டு, கொலை உட்பட பல்வேறு வழக்குகள் இருந்தன என்பதை டெக்கான் கிரானிக்கிளின் இந்த நிருபர் எப்படிக் கண்டுபிடித்தார் ? இன்ஸ்பெக்டர் விஜயக்குமாருக்கு கையில் காயம் ஏற்பட்டது என்பதை இந்த நிருபருக்கு யார் சொன்னது ?
இந்த நிருபரின் பெயர் அருளொளி. அருளொளி என்று வைப்பதற்கு பதிலாக இருட்டுச்சாமி என்று பெயரை மாற்றிக் கொள்ளுங்கள். நீங்கள் எழுதிய எழுத்தில் ஒளியை விட இருளே நிறைந்திருக்கிறது.
இந்த அருளொளி பத்திரிக்கையாளர் வேலைபார்ப்பதை விட, திருநெல்வேலி சந்தையில் புளி வியாபாரம் செய்யலாம். இறந்து போன ஒரு மனிதனின் மேல் கொலை வழக்கு இருக்கிறது என்று எப்படி ஒரு பச்சைப் பொய்யை இந்த நிருபரால் சொல்ல முடிந்தது ?
டைம்ஸ் ஆப் இந்தியா, டெக்கான் நிருபரை தூக்கிச் சாப்பிட்டு விடுவார் போலிருக்கிறது.
0 comments:
Post a Comment