- சிக்கன் - அரைக் கிலோ
- மிளகாய்தூள் - ஒரு தேக்கரண்டி(காரத்திற்க்கேற்ப)
- இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
- மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி
- உப்பு - தேவைக்கு
- தயிர் - 3 தேக்கரண்டி
- பெரிய வெங்காயம் - ஒன்று (நீளமாக நறுக்கவும்)
- தக்காளி - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
- அரைக்க :
- தேங்காய் துருவல் - 6 தேக்கரண்டி
- சோம்பு - அரை தேக்கரண்டி
- தாளிக்க :
- பட்டை, கிராம்பு, சோம்பு கலவை - ஒரு தேக்கரண்டி
- கறிவேப்பிலை - ஒரு கொத்து
- எண்ணெய் - கால் கரண்டி
சிக்கனை சுத்தம் செய்து அதில் இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள்தூள், உப்பு, மிளகாய்தூள், தயிர் சேர்த்து அரை மணி நேரம் பிசைந்து வைக்கவும்.
| |
வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் தாளிக்கும் பொருளை போட்டு தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
| |
தக்காளி, கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
| |
சிக்கனை சேர்த்து ஒரு தம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு வேக வைக்கவும்.
| |
சிக்கன் நன்றாக வெந்ததும் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து சுருள வதங்கியதும் மல்லிதழை தூவி இறக்கவும்.
| |
ஈசி சிக்கன் கறி ரெடி.
|
0 comments:
Post a Comment