Pages

Monday, 3 September 2012

இறால் திக்கிடி



 
  • மாவு செய்ய
  • ============
  • வறுத்த இடியப்ப மாவு - 2 கப்
  • உப்பு - 3/4 ஸ்பூன்
  • ஜீரகத் தூள் - 1/2 ஸ்பூன்
  • சின்ன வெங்காயம் - 4
  • தேங்காய் துருவல் - 3/4 கப்
  • இறால் மசாலா செய்ய
  • ====================
  • இறால் - 1/2 கிலோ
  • வெங்காயம் - 4
  • இஞ்சி&பூண்டு விழுது - 1.5 ஸ்பூன்
  • தக்காளி - 1
  • மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
  • மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
  • சோம்பு தூள் - 1/4 ஸ்பூன்
  • கறிமசாலா தூள் - 1/2 ஸ்பூன்
  • மல்லி தழை நறுக்கியது - 3 ஸ்பூன்
  • கறிவேப்பிலை - சிறிது நறுக்கியது

  • முதலில் மாவு செய்ய சீரகம்,தேங்காய் மற்றும் சின்ன வெங்காயத்தை அரைத்து எடுத்து அரிசி மாவில் சேர்க்கவும்
  • தேவைக்கு உப்பும் கலந்து கொதித்த தண்ணீர் கலந்து இடியப்ப மாவு போல் திரட்டவும்
  • பின்பு அதனை பிரும்பிய வடிவில் குட்டி குட்டியாக உருட்டி எடுக்கவும்.அதிக நேரம் செலவிட முடியாவிட்டால் நீளமாக மாவை உருட்டி எடுத்து கத்தியால் வெட்டி வெட்டி எடுக்கவும்
  • பின்பு உருட்டிய மாவுகளை ஆவியில் 15 நிமிடம் வேகவைத்து எடுக்கவும்
  • பின்பு மசாலா செய்ய முதலில் பெரிய இறாலை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.சிறிது என்றால் அப்படியே சேர்க்கலாம்
  • பின்பு எண்ணை காயவைத்து வெங்காயத்தி நன்கு வதக்கவும்
  • பின்பு இஞ்சி பூண்டு சேர்த்து பச்சை வாசனை போனதும் தக்காளி மற்றும் இதர பொடிகள் சேர்த்து நன்கு வதக்கி தக்காளி உடையும் வரை வதக்கவும்
  • பின்பு மல்லி,கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்
  • பின்பு இறால்,தேவைக்கு உப்பு மற்றும் உருட்டிய மாவினை சேர்த்து வதக்கவும்
  • மசாலாவில் தண்ணீர் வற்றியிருந்தால் 1/4 கப் தண்ணீர் சேர்த்து கிளறி மூடி வைத்து விடவும்
  • 10 நிமிடம் மூடி வைத்து மசாலா மாவோடு கலந்தபின் தீயை அணைக்கவும்
  • சுவையான இறால் திக்கிடி ரெடி

Note:

விரும்பினால் பச்சை மிளகாய் சேர்த்துக் கொள்ளலாம்.சிறிய வகை இறாலில் செய்தால் சுவை அபாரமாக இருக்கும்.கேரளாவில் செம்மீன் பத்திரி,செம்மீன் பிடி என்று பல பெயர்களில் சொல்வார்கள்

0 comments:

Post a Comment