- கடலைப்பருப்பு - 3 தேக்கரண்டி
- தேங்காய் துண்டுகள் - கால் கப்
- பச்சை மிளகாய் - 3 - 4
- கறிவேப்பிலை
- வெங்காயம் - ஒன்று
- தக்காளி - ஒன்று
- எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
- கடுகு, சீரகம், உளுந்து, கடலைப்பருப்பு - தாளிக்க
- உப்பு - தேவையான அளவு
- மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
கடலைப்பருப்பை அரை தேக்கரண்டி எண்ணெய் விட்டு வறுத்து எடுக்கவும். இத்துடன் தேங்காய், பச்சை மிளகாய் சேர்த்து அரைக்கவும்.
| |
தேவைக்கு நீர் விட்டு நைசாக அரைத்து எடுக்கவும்.
| |
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கவும். இதில் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
| |
வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
| |
இதில் அரைத்த விழுது சேர்த்து 2 - 3 கப் வரை நீர் விட்டு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
| |
மசாலா வாசம் போய் குருமா பதம் வந்ததும் இறக்கவும். சுவையான கடலைப்பருப்பு குருமா தயார். தோசை, இட்லி, சப்பாத்திக்கு சுலபமான சைட் டிஷ்.
|
நீர் நிறைய சேர்க்க வேண்டும். கடலைப்பருப்பு அரைத்து சேர்ப்பதால் உடனே கெட்டியாகி அடிப்பிடிக்கும். அடிக்கடி கிளறிவிட வேண்டும். மசால் வாசம் போகும் முன் கெட்டியானால் இடையில் சூடான நீர் சேர்க்கவும்.
0 comments:
Post a Comment