Pages

Friday, 7 September 2012

மிளகாய் சிக்கன்



 
  • சிக்கன்
  • தக்காளி - 2
  • வெங்காயம் - 2
  • வரமிளகாய் - 8
  • இஞ்சி
  • பூண்டு
  • கொத்தமல்லி தழை


சிக்கனை உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து 30 நிமிடம் ஊற வைக்கவும்.
தேவையான பொருட்களை எடுத்து வைத்து கொள்ளவும்.
சிறிய பாத்திரத்தில் வரமிளகாய் மூழ்கும் வரை நீர் விட்டு, 5 -10 நிமிடம் வேக வைக்கவும். வெந்ததும், மிளகாய் மட்டும் எடுத்து மிக்ஸியில் நைசாக அரைக்கவும். அரைத்தவற்றை படத்தில் உள்ளது போல், வடிகட்டி எடுத்து கொள்ளவும்.
ஊறிய சிக்கனை கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
மீண்டும் கடாயில் எண்ணெய் ஊற்றி, வெங்காயம், தக்காளி போட்டு நன்கு வதக்கவும். அதன் பின் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும்
அதன் பின், வடிகட்டி வைத்துள்ள வரமிளகாய் கரைசலை சேர்க்கவும். ஒரு கொதி வரும் வரை மூடி வைக்கவும்.
பின்னர் சிக்கன் துண்டுகளை போடவும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூடி வைக்கவும்.
சிக்கன் வெந்த பின்பு, கொத்தமல்லி தழை தூவி சூடாக பரிமாறவும். கார சாரமான மிளகாய் சிக்கன் ரெடி. இட்லி, தோசை, சப்பாத்தி, பரோட்டா, சாதம் என எல்லா உணவிற்கும் ஏத்த சைடு டிஷ்.

0 comments:

Post a Comment