- மைதா மாவு - ஒரு கப் (250 மில்லி கப்)
- வெண்ணெய் - 4 மேசைக்கரண்டி
- எள் - ஒரு மேசைக்கரண்டி
- சர்க்கரை - ஒரு தேக்கரண்டி
- உப்பு - சுவைக்கு
- கறிவேப்பிலை - 2 தேக்கரண்டி
- ஓமம் - ஒரு தேக்கரண்டி
- பால் - தேவைக்கு
மைதாவில் வெண்ணெய் கலந்து நன்றாக பிசையவும்.
| |
இதில் எள், சர்க்கரை, உப்பு, கறிவேப்பிலை (பொடியாக நறுக்கியது), ஓமம் அனைத்தும் சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
| |
பின் பால் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசைந்து வைக்கவும்.
| |
மாவை சப்பாத்தியாக இட்டு ஹார்ட் ஷேப் பிஸ்கட் கட்டர் கொண்டு வெட்டவும். பிஸ்கட்டின் மேலே ஃபோர்க் கொண்டு ஓட்டைகள் இடவும்.
| |
அவனை 180 C'கு முற்சூடு செய்து, ட்ரேவில் அலுமினியம் ஷீட் போட்டு எண்ணெய் தடவி அதில் பிஸ்கட்களை அடுக்கவும்.
| |
இவற்றை 15 நிமிடம் பேக் செய்யவும். சுவையான மசாலா ஹார்ட்ஸ் தயார்.
|
பேக் செய்ய பயன்படுத்தும் வெண்ணெய் ரூம் டெம்பரேச்சரில் இருப்பது அவசியம். பாலும் இளஞ்சூடாக இருந்தால் நல்லது. இந்த பிஸ்கட்கள் சற்று பொன்னிறமாக வரும்போதே எடுத்து விடவும், அதன் பின் 2 நிமிடம் இருந்தாலும் நிறம் டார்க் ஆகிவிடும். 10 நிமிடத்துக்கு மேல் கவனித்து கொண்டே இருப்பது நல்லது. இத்துடன் காரம் சேர்க்க விரும்பினால் பச்சை மிளகாய் விதை இல்லாமல் பொடியாக நறுக்கியது அல்லது மிளகாய் தூள் சிறிது சேர்க்கலாம். ஃபோர்க் கொண்டு ஓட்டை இடுவதால் பிஸ்கட் பூரி போல் எழும்பாமல் இருக்கும். மாவை மெல்லிதாக இட்டால் நேரம் இன்னுமே குறைவாக வைக்கவும். மெல்லியதாக இடும் போது நல்ல க்ரிஸ்பியாக இருக்கும்.
0 comments:
Post a Comment