- ஊற வைக்க :
- மட்டன் - அரை கிலோ
- தயிர் - ஒரு கப்
- மிளகாய் பொடி - அரை தேக்கரண்டி
- மல்லிப் பொடி - அரை தேக்கரண்டி
- மஞ்சள் பொடி - சிறிது
- கரம் மசாலா - அரை தேக்கரண்டி
- இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
- புதினா, மல்லி தழை - ஒரு கைப்பிடி
- வாசனை பொருட்கள் :
- பட்டை - 3
- கிராம்பு - 4
- ஏலக்காய் - ஒன்று
- பிரியாணி இலை - 3
- முந்திரி - 5
- வதக்க :
- பாஸ்மதி அரிசி - 2 கப்
- பெரிய வெங்காயம் - 2
- பச்சை மிளகாய் - 5
- இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
- தக்காளி - 2
- புதினா மல்லி தழை - ஒரு கைப்பிடி
- மல்லி, மிளகாய், மஞ்சள், கரம் பொடி - தலா அரை தேக்கரண்டி
- நெய் மற்றும் எண்ணெய் - தாளிக்க
- உப்பு - தேவைக்கு
,.
|
முதலில் தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும். தக்காளி, வெங்காயம், மல்லி, புதினா மற்றும் பச்சை மிளகாயை தேவையான அளவில் நறுக்கிக் கொள்ளவும். அரிசியை 20 நிமிடம் ஊற வைக்கவும்.
|
ஊற வைக்க தேவையான பொருட்களை கறியுடன் நன்கு கலந்து அரை மணி நேரம் மேரினேட் செய்யவும்.
| |
பின் குக்கரில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ஒரு பட்டை, இரண்டு கிராம்புகளை போட்டு, சிறிது வெங்காயம் சேர்த்து வதக்கி கறியை போட்டு 5 விசில்கள் வந்ததும் இறக்கவும்.
| |
பின் ஒரு கடாயில், நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வாசனை பொருட்களை சேர்த்து பொரிந்ததும், பச்சை மிளகாய் மற்றும் சிறிது புதினா, மல்லி தழைகளை போட்டு வதக்கவும்.
| |
வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசம் போகும்படி வதக்கவும்.
| |
நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து நன்கு குழையும்படி வதக்கி பொடி வகைகளை சேர்க்கவும்.
| |
ஒன்று சேர நன்கு வதங்கியதும், குக்கரில் இருக்கும் கறியை சேர்த்து 5 நிமிடம் அடுப்பில் வைக்கவும்.
| |
பின் எலக்ட்ரிக் அடுப்பில் தேவையான நீர் சேர்த்து வைக்கவும். பிரஷர் குக்கரில் வைப்பவர்கள் கறியுடன் தாளித்து அரிசி சேர்த்து தேவையான நீருடன் வைக்கவும்.
| |
அரை மணி நேரத்தில் மணமான பிரியாணி ரெடி
| |
பத்து நிமிடம் கழித்து சிறிது நெய் சேர்த்து ஒன்று சேர பிரட்டி பரிமாறவும்.
|
0 comments:
Post a Comment