Pages

Friday, 3 August 2012

அசத்தும் குஜராத்


மத்திய மின்தொகுப்பிற்கு மி்ன்சாரம் தர தயார் : அசத்தும் குஜராத்


ஆமதாபாத் : நாட்டின் மத்திய மின்தொகுப்பிலிருந்து தங்களுக்கு கூடுதலாக இவ்வளவு மின்சாரம் வேண்டும் ‌என்று பல மாநிலங்கள் கூறிவரும் நிலையில், அந்த மத்திய மின்தொகுப்பிற்கே, தாங்கள் மின்சாரம் தர தயார் என்று குஜராத் அரசு தெரிவித்திருப்பது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

மத்திய மின் தொகுப்பிலிருந்து உத்தரபிரதேச மாநிலம் அதிகளவு மின்சாரத்தை எடுத்துக்கொண்‌டதன் விளைவாக நாட்டின் தலைநகர் டில்லி மட்டுமல்லாது 15க்கும் மேற்பட்ட மாநிலங்கள் இருளில் மூழ்கின. நாட்டின் மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் (சுமார் 60 கோடி மக்கள்) இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், மின்துறையை தன்னகத்தே கூடுதலாக பெற்றுள்ள அ‌மைச்சர் வீரப்ப ‌மொய்லி, உரிய நடவடி‌க்கைகள் எடுக்கப்பட்டு, மீண்டும் இயல்புநிலைக்கு திரும்பும் என்று உறுதி அளித்ததன் பேரில், நாட்டின் வடமாநிலங்களில் தற்போது மெல்ல மெல்ல இயல்புநிலை திரும்பி வருகிறது. ஒட்டுமொத்த நாடே, இருளில் மூழ்கியிருந்த நிலையில், குஜராத் மாநிலம் மட்டும் இதில் பாதிக்கப்படாமல் இருந்தது.

மின்சாரம் தர தயார் : இந்நிலையில், பத்திரிகையாளர்களை சந்தித்த குஜராத் மாநில மி்ன்சாரத்துறை அமைச்சர் சவுரப் படேல் கூறியதாவது, நாட்டின் வடக்கு, கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் கடும் மின்தடையால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு உடனடி நிவாரணம் அளிக்கும் பொருட்டு, மத்திய மின்தொகுப்பிற்கு 2000 மெகாவாட்ஸ் மின்சாரம் வழங்க தங்கள் மாநிலம் தயாராக உள்ளது.

அவர் மேலும் கூறியதாவது, மாநிலத்தின் மின்தேவையைக் காட்டிலும், தங்கள் மாநிலம் அதிகளவு மி்ன்சாரத்தை உற்பத்தி செய்து வருகிறது. இதன்காரணமாக, மாநிலத்தில் உள்ள பாமர மக்‌களும், தாங்கள் நினைத்த ‌‌நேரத்தில். நினைத்த மின் உபகரணங்களை இயக்க முடியும். இதற்கு எந்தவொரு தடையுமில்லை. 1961ம் ஆண்டு முதல் 2002ம் ஆண்டு வரை, 8 ஆயிரம் மெகாவாட்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்து வந்த தங்கள் மாநிலம், கடந்த 10 ஆண்டுகளில் மின் உற்பத்தி கணிசமான அளவு அதிகரித்துள்ளது.

மாநிலத்தின் தற்போதைய நிலவரப்படி, 15,906 மெகாவாட்ஸ் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருவதாகவும், ஆனால், மாநிலத்தின் மின்தேவை 12 ஆயிரம் மெகாவாட்‌சே ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது 15,906 மெகாவாட்ஸ் அளவிற்கு உள்ள மின் உற்பத்தி‌யை, இந்தாண்டு டிசம்பருக்குள் 18 ஆயிரம் மெகாவாட்ஸ் அளவிற்கு உயர்த்த திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.

சோலார் மின் உற்பத்தியில் சாதனை : சூரிய ஒளியின் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்தலில், 2011 - 12ம் ஆண்டில், ஒட்டுமொத்த நாடே, 110 மெகாவாட்ஸ் மின்சாரம் உற்பத்தி செய்திருந்த நிலையில், இந்த காலகட்டத்தில், குஜராத் மாநிலம் 600 மெகாவாட்ஸ் அளவிற்கு மின்சாரம் உற்பத்தி செய்துள்ளது.

மி்ன்சாரத்திற்கு பதில் பெட்ரோல் : மத்திய மின்தொகுப்பிற்கு தாங்கள் மி்ன்சாரம் அளிக்க தயாராக உள்ள நிலையில், பெட்ரோலை தங்கள் மாநிலத்திற்கு குறைந்த விலையில் அளிக்க மத்திய அரசு தயாரா என்று அவர் மத்திய அரசிற்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

0 comments:

Post a Comment