- பாஸ்மதி அரிசி - ஒரு கப்
- பட்டாணி - அரை கப்
- உதிர்த்த கார்ன் - அரை கப்
- வரமிளகாய் - 6
- பட்டை - ஒன்று
- சீரகம் - ஒரு மேசைக்கரண்டி
- பெருங்காயம் - ஒரு சிட்டிகை
- மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
- மிளகாய் தூள் - தேவைக்கு
- உப்பு - தேவைக்கு
- எண்ணெய் - தாளிக்க
- கடுகு - சிறிது
- மல்லித் தழை - சிறிது
முதலில் தேவையானப் பொருட்களை எடுத்துக் கொள்ளவும்.
| |
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, பட்டை, மிளகாய் மற்றும் சீரகத்தை போட்டு பொரிக்கவும்.
| |
பெருங்காயம், மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூளை போட்டு கலக்கவும்.
| |
பின் பட்டாணியையும், கார்னையும் உப்புடன் சேர்த்து நன்கு கிளறவும்.
| |
மசால் நன்கு பிடித்ததும், உதிரியாக வேக வைத்த சாதத்தை போட்டு கிளறவும்.
| |
சூடான புலாவ் ரெடி. மல்லித் தழையை தூவவும்.
|
வெங்காயம், தக்காளி போன்ற அடிப்படை பொருட்கள் இல்லாவிட்டாலும், குறைந்த பொருட்களை கொண்டு மிக விரைவில் செய்யலாம்.
0 comments:
Post a Comment