- சின்ன வெங்காயம் - 10
- பூண்டு - 5 பல்
- புளி - நெல்லிக்காய் அளவு
- மஞ்சள் தூள், உப்பு
- கறிவேப்பிலை
- வறுத்து அரைக்க:
- மிளகு - ஒரு மேசைக்கரண்டி
- சீரகம் - ஒரு தேக்கரண்டி
- துவரம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
- உளுந்து - ஒரு தேக்கரண்டி
- மிளகாய் வற்றல் - 2
- தனியா - ஒரு மேசைக்கரண்டி
- வதக்கி அரைக்க:
- தேங்காய் துருவல் அல்லது பொடியாக நறுக்கியது - ஒரு மேசைக்கரண்டி
- சின்ன வெங்காயம் - 4
- பூண்டு - 2 பல்
- தாளிக்க:
- எண்ணெய் - தேவைக்கு
- கடுகு, சீரகம், உளுந்து, கடலைப்பருப்பு
- பெருங்காயம் - கால் தேக்கரண்டி
கடாயில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் வறுத்து அரைக்க வேண்டிய அனைத்தையும் ஒவ்வொன்றாக சேர்த்து வறுத்து எடுக்கவும்.
| |
பின் இன்னும் சிறிது எண்ணெய் விட்டு தேங்காயை வதக்கவும்.
| |
பின் வெங்காயம் மற்றும் பூண்டு வதக்கி எடுக்கவும். வறுத்தவற்றை மிக்ஸியில் போட்டு பொடித்து அத்துடன் தேங்காய், வெங்காயம், பூண்டும் சேர்த்து அரைத்து தேவைக்கு நீர் விட்டு நைசாக அரைத்து எடுக்கவும்.
| |
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளித்து கறிவேப்பிலை, வெங்காயம், பூண்டு பொடியாக நறுக்கி சேர்த்து வதக்கவும்.
| |
வதங்கிய வெங்காயத்துடன் அரைத்த விழுது, புளிக்கரைசல், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
| |
கொதித்து எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கவும். சுவையான மிளகு குழம்பு தயார்.
|
0 comments:
Post a Comment