Pages

Saturday, 28 July 2012

செய்தி குறிப்பு


லண்டன் ஒலிம்பிக் போட்டியின் முதல் தங்கப் பதக்கத்தை சீனா வென்றுள்ளது

பதிவு செய்த நாள் - July 28, 2012 5:04 pm
லண்டன் ஒலிம்பிக் போட்டியின் முதல் தங்கப் பதக்கத்தை சீனா வென்றுள்ளது. மகளிர் துப்பாக்கிச் சுடுதல் போட்டியின் 10 மீட்டர் ஏர் ரைபில் பிரிவுக்கான இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. இதில், சீன வீராங்கனை யீ – ஸ்லிங், 502 புள்ளி 9 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கத்தை வென்றார். போலந்தின் சில்வியா, 502 புள்ளி 2 புள்ளிகள் பெற்று வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார். மற்றொரு சீன வீராங்கனை டான் யூ, 501 புள்ளி 5 புள்ளிகள் பெற்று வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
இந்த வெற்றியின் மூலம் லண்டன் ஒலிம்பிக் போட்டியின் முதல் தங்கப் பதக்கத்தை வென்ற பெருமையை சீனா தட்டிச் சென்றுள்ளது.

டேபிள் டென்னிஸ்: அன்கிதா தாஸ் தோல்வி

பதிவு செய்த நாள் - July 28, 2012 8:12 pm
மகளிருக்கான ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை அன்கிதா தாஸ், ஸ்பெயினின் சாரா ரமிரிஸிடம் தோல்வியடைந்தார்.
இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஸ்பெயின் வீராகனை சாரா, முதல் 3 செட்களை 11க்கு ஒன்பது, 11க்கு எட்டு, 11க்கு ஏழு என்ற செட் கணக்கில் கைப்பற்றினார். எனினும் 4வது சுற்றில் சுதாரித்து விளையாடிய அன்கிதா தாஸ், அதனை 11க்கு எட்டு என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றினார். எனினும் அடுத்த செட்டை 11க்கு இரண்டு என்ற புள்ளிக்கணக்கில் வென்ற சாரா, நான்கிற்கு ஒன்று என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவு தகுதி சுற்று :இந்திய வீரர் வெற்றி

பதிவு செய்த நாள் - July 28, 2012 4:45 pm
லண்டன் ஒலிம்பிக் போட்டியின் பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவு தகுதி சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் பருப்பள்ளி காஷ்யப் வெற்றி பெற்றார்.
இந்திய நேரப்படி இன்று பிற்பகல் மூன்றரை மணியளவில் முடிவடைந்த இந்தப் போட்டியில், இந்தியாவின் காஷ்யப், பெல்ஜியம் வீரர் யோஹன் டானை, 21க்கு 14, 21க்கு 12 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். இப்போட்டியில் தொடக்க முதலே சிறப்பாக விளையாடிய காஷ்யப், இறுதியில் இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற நேர் செட்களில் வெற்றி பெற்றுள்ளார். குரூப் D பிரிவில் இடம்பெற்றுள்ள காஷ்யப், வியட்நாம் வீரர் டெய்ன் மிங் உடன் வரும் 31ம் தேதி நடைபெறும் மற்றொரு தகுதிச் சுற்றுப் போட்டியில் விளையாடுகிறார்.

ஐ.ஏ.எஸ்., முதல்நிலை தேர்வு முடிவு வெளியீடு

பதிவு செய்த நாள் - July 28, 2012 5:56 pm
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்.,உள்ளிட்ட  பணிகளுக்கான முதல் கட்டமாக நடந்த யு.பி.எஸ்.சி Prelimary Exam எனப்படும் முதல்நிலைத் தேர்விற்கான முடிவு இன்று வெளியிடப்பட்டுள்ளது.
டெல்லி, மும்பை, பெங்களூரு, ஐதராபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கடந்த மே மாதம் 20 ஆம் தேதி நடைபெற்ற இந்த தேர்வை 5 லட்சத்திற்கும் அதிகமானோர் எழுதினர். தமிழகத்தில் சென்னை, மதுரை ஆகிய இரு தேர்வு மையங்களில் சுமார் 20 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். இந்த தேர்வின் முடிவுகளை யு.பி.எஸ்.சி இன்று வெளியிட்டுள்ளது.
தேர்வு முடிவுகளை www.upsc.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.இந்தத் தேர்வில் சுமார் 13 ஆயிரம் பேர் தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.இவர்களுக்கான முதன்மைத் தேர்வு வரும் அக்டோபர் மாதம் 5 ஆம் தேதி நடைபெறுகிறது.

0 comments:

Post a Comment