Pages

Saturday, 28 July 2012

வெங்காய சாதம்



 
  • அரிசி - ஒரு கப்
  • பெரிய வெங்காயம் - ஒன்று
  • பச்சை மிளகாய் - ஒன்று
  • கரம் மசாலா - ஒரு தேக்கரண்டி
  • உப்பு
  • எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
  • தாளிக்க (விரும்பினால்):
  • கடுகு


வெங்காயம், பச்சை மிளகாய் நறுக்கி வைக்கவும். சாதத்தை உப்பு சேர்த்து வடித்து வைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
இதில் சிறிது உப்பு (வெங்காயத்துக்கு மட்டும்), கரம் மசாலா சேர்த்து வதக்கவும்.
பச்சை வாசம் போக வதங்கியதும் வடித்த சாதம் கலந்து அழுத்தி வைக்கவும்.
சுவையான வெங்காய சாதம் தயார். விரும்பினால் கொத்தமல்லி தூவி எடுக்கவும்.

பெரிய வெங்காயத்துக்கு பதிலாக ஒரு கப் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயமும் பயன்படுத்தலாம். பச்சை மிளகாய்க்கு பதில் மிளகாய் தூள் சேர்க்கலாம். தாளிக்க கடுகுடன் சீரகம், உளுந்து, கடலைப்பருப்பு, கறிவேப்பிலையும் சேர்க்கலாம்.

0 comments:

Post a Comment