- கோழி - 2 தொடைகள்
- வெங்காயம் - 2
- தக்காளி - ஒன்று
- பச்சைமிளகாய் - 5
- இறைச்சி மசாலா - 2 தேக்கரண்டி
- மிளாகாய் பொடி - 2 தேக்கரண்டி
- மஞ்சள் பொடி - அரை மேசைக்கரண்டி
- உப்பு - தேவைக்கேற்ப
- கறிவேப்பிலை - ஒரு கொத்து
- கொத்தமல்லி – சிறிதளவு
- அரைக்க :
- இஞ்சி - சிறு துண்டு
- பூண்டு - ஒரு பல்
- வெங்காயம் - பாதி
- தாளிக்க :
- பட்டை - ஒரு சிறுத் துண்டு
- லவங்கம் - 2
- ஏலக்காய் - 2
- பிரிஞ்சி இலை - ஒன்று
- எண்ணெய் - 200 கிராம்
சிக்கனை நன்கு அலசி எடுத்து வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை நீளவாக்கிலும், தக்காளியை சிறியதாகவும், பச்சை மிளகாயை கீரியும் வைக்கவும். அரைக்க கொடுத்தவற்றை அரைத்து தயாராக வைக்கவும்..
| |
முதலில் தவாவில் எண்ணெய் ஊற்றி பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலை, சிறிது கறிவேப்பிலை கொண்டு தாளிக்கவும். பின் அதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கி, தக்காளி சேர்த்து குழையும் வரை நன்கு வதக்கவும். பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து சில நொடிகள் வதக்கவும்.
| |
அதனுடன் தேவையான அளவு உப்பு மற்றும் பொடி வகைகளை சேர்த்து பச்சை வாசம் போகும் வரை அடி பிடிக்காமல் கிளறவும்.
| |
சிக்கனை அதனுடன் சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். எண்ணெய் பிரிந்து வரும்போது அடிப்பிடிக்காமல் கிளறிக்கொண்டே இருக்கவும்.
| |
கிரேவி சிறிது திக்கானதும், கறிவேபிலையை எண்ணெயில் பொரித்து கொத்தமல்லியுடன் சேர்த்து அலங்கரிக்கவும். சுவையான தவா சிக்கன் ரெடி. இந்த கிரேவி சாதத்தில் சேர்த்து சாப்பிட அருமையா இருக்கும்.
|
இந்த தவா சிக்கன் முறையில் காரம் அதிகம் விரும்புவோர் பச்சை மிளகாயை கூட்டியும் குறைத்தும் செய்யலாம். நான் ஆச்சி மிளகாய் பொடி உபயோகித்திருக்கிறேன். மற்றும் நீங்க உபயோகிக்கும் மிளகாய் பொடி காரமாக இருக்குமானால் அளவு பார்த்து சேர்த்துக் கொள்ளவும். விரும்பினால் சிக்கன் சேர்க்கும் முன் ஒரு மேசைக்கரண்டி வெண்ணெயை சேர்த்து கிளறி பின் சிக்கன் சேர்த்து கொதிக்க விட்டால் ப்ளேவர் நன்றாக இருக்கும்.
0 comments:
Post a Comment