Pages

Monday, 30 July 2012

காலிஃப்ளவர் பொடிமாஸ்



 
  • காலிஃப்ளவர் - ஒன்று
  • வெங்காயம் - ஒன்று
  • பச்சை மிளகாய் - 2 (விழுதாக்கவும்)
  • புதினா, கொத்தமல்லி விழுது - ஒரு தேக்கரண்டி
  • இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
  • உப்பு - தேவைக்கு ஏற்ப
  • உடைத்தகடலை, முந்திரி, வேர்கடலை - தலா ஒரு தேக்கரண்டி
  • எண்ணெய், கடுகு, சீரகம், கறிவேப்பிலை, உளுந்து - தாளிக்க
  • கொத்தமல்லி - சிறிது
  • தேங்காய் - ஒரு தேக்கரண்டி (விருப்பப்பட்டால்)


காலிஃப்ளவரை நன்கு துருவி, ஆவியில் வேக விடவும்.
எண்ணெயில் தாளிப்பு சேர்த்து, வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, பச்சைமிளகாய் விழுது, புதினா விழுது சேர்த்து வதக்கவும்.
வெந்த காயை சேர்த்து கிளறவும்.
மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.
எண்ணெய் விட்டு முந்திரி, வேர்கடலை, உடைத்த கடலை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
காலிஃப்ளவருடன் வறுத்த கடலை, தேங்காய் சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

0 comments:

Post a Comment