- பாசுமதி அரிசி - 2 கப்
- சிக்கன் எலும்போடு - 800 கிராம்
- எலும்பில்லாத சிக்கன் கொத்து கறி - அரை கப்
- உருளைக்கிழங்கு - ஒன்று
- தயிர் - ஒரு கப்
- இஞ்சி பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டி
- மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
- கரம் மசாலா - ஒரு தேக்கரண்டி
- மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
- புதினா இலை - 2 மேசைக்கரண்டி அளவு
- பச்சை மிளகாய் - 4
- வெங்காயம் - 3
- குங்குமப்பூ - சிறிது
- பால் - 2 மேசைக்கரண்டி
- தாளிக்க:
- பட்டை - சிறிது
- லவங்கம் - 5
- கறுப்பு ஏலக்காய் - 2
- பச்சை ஏலக்காய் - 2
- சீரகம் - ஒரு தேக்கரண்டி
- எண்ணெய் + நெய் - 4 மேசைக்கரண்டி
சிக்கன் துண்டுகளில் தூள் வகைகள், சிறிது உப்பு, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பிரட்டவும்.
| |
அரை மணி நேரம் விட்டு தயிர் சேர்த்து மீண்டும் பிரட்டி அரை மணி நேரம் ஊற விடவும். அரிசியை கழுவி ஊற வைக்கவும்.
| |
பாத்திரத்தில் எண்ணெய் மற்றும் நெய் விட்டு காய்ந்ததும் சீரகம், பட்டை, லவங்கம், இருவகை ஏலக்காய் தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
| |
இதில் கொத்திய எலும்பில்லாத கறியை சேர்த்து பிரட்டவும்.
| |
கறி கலர் மாறும் போது உருளையை சேர்த்து வதக்கவும்.
| |
உருளை சற்று வதங்கியதும் சிக்கன் கலவையை சேர்த்து கலந்து மூடி வேக விடவும்.
| |
சிக்கன் வெந்ததும் அரிசி மற்றும் புதினா இலை சேர்த்து பிரட்டி விடவும்.
| |
2 நிமிடம் பிரட்டியதும் உப்பு மற்றும் 3 1/2 கப் நீர் விட்டு கொதி வந்ததும் பாலில் ஊறிய குங்குமப்பூ சேர்த்து சிறுந்தீயில் போட்டு மூடி வேக விடவும்.
| |
சுவையான சிந்தி சிக்கன் பிரியாணி தயார்.
|
0 comments:
Post a Comment