Pages

Monday, 30 July 2012

மண்ணாங்கட்டி



 
  • மண்ணாங்கட்டி:
  • கொழுக்கட்டை மாவு
  • இட்லி மிளகாய்பொடி
  • உப்பு
  • பெருங்காயப்பொடி
  • தேங்காய்துருவல்
  • எண்ணெய்
  • கடுகு
  • கடலை உருண்டை:
  • நிலக்கடலை - 2 கப்
  • வெல்லம் - ஒரு கப்


மண்ணாங்கட்டி
தேவையானவற்றை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
வெல்லக் கொழுக்கட்டைக்கு தயார் செய்த மேல்மாவு அதிகமாகி விட்டால் அத்துடன் தேவையான அளவு இட்லி மிளகாய்பொடி, உப்பு, பெருங்காயப்பொடி, தேங்காய்துருவல் சேர்த்து நன்கு பிசையவும். அதை சிறு உருண்டையாக உருட்டி தட்டையாக்கி நடுவில் கட்டை விரலால் அமுக்கி விடவும்.
அவற்றை இட்லி வேக வைப்பது போல் ஆவியில் வேக விடவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து, அதில் மண்ணாங்கட்டிகளைப் போட்டு ரோஸ்ட் செய்யவும்.
இனிப்பான கொழுக்கட்டைக்கு இந்த மண்ணாங்கட்டி நல்ல மேட்ச்.
கடலை உருண்டை
கடலையை வறுத்து ஒரு முறத்தில் போட்டுத் தேய்த்து தோல் நீக்கி இரண்டாக உடைத்துக் கொள்ளவும். அல்லது கடையில் தயாராகக் கிடைக்கும் உப்பு சேர்க்காத கடலையை வாங்கி சுத்தம் செய்து லேசாக சூடு வர வறுக்கவும்.
வெல்லத்துடன் கால் கப் நீர் சேர்த்து பாகு வைக்கவும். வெல்லம் கரைந்ததும் வடிகட்டி மண் நீக்கவும். மீண்டும் அடுப்பில் வைத்து கெட்டி கம்பிப் பாகு ஆக்கவும். (பாகை தண்ணீரில் போட்டால் கரையாமல் உருட்டும் பதம்.)
பாகை இறக்கி கடலையில் விட்டு ஒரு கரண்டிக் காம்பால் கிளறவும்.
சற்று ஆறியதும், கையில் சிறிது அரிசி மாவைத் தொட்டுக் கொண்டு சிறிய உருண்டைகளாகப் பிடிக்கவும். ஆறியதும் எடுத்து வைக்கவும். சத்தான இந்த கடலை உருண்டையை குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள்!

0 comments:

Post a Comment