என்னுடைய இந்த சமையல் அறை, எனது வீட்டில் எனக்கு மிகவும் பிடித்தமான இடம். அறை சிறியது தான். ஆனால் நிறைய கேபினெட் இருப்பதால் மிகவும் வசதியாக இருக்கிறது. கேபினெட் கதவுகள் எல்லாம் லைட் கலரில் இருப்பதால் அழுக்கானால் உடனே தெரிந்து விடும். அதனால் சுத்தம் செய்வதற்கு சுலபமாக இருக்கிறது. இந்த ஜன்னல் வழியாக வெளிச்சம் வரும். சம்மர் சமயத்தில் மட்டுமே காற்றுக்காக திறந்து வைத்து இருப்பேன். புறாக்கள் வெளியில் நின்று கொண்டிருக்கும். அதனால் நெட் போட்டே வைத்து இருப்பேன். சமையல் வேலை முடிந்ததும் ஜன்னலை மூடி விடுவேன். ஜன்னல் அருகில் ரைஸ் குக்கர் வைத்து இருக்கின்றேன். அதற்கு இடது பக்கத்தில் மைக்ரோவேவ் வைத்துள்ளேன். சுவருக்கும் டைல்ஸ் போடப்பட்டு இருக்கின்றது. கிச்சன் மேடை முழுவதும் சில்வரிலேயே இருப்பதால் துடைத்து சுத்தம் செய்ய வசதியாக இருக்கிறது.
கீழே உள்ள கப்போர்டில் வலது பக்கம் வெங்காயம் மற்றும் புதிதாக வந்திருக்கும் மசாலா பாக்கெட் வகைகளை வைத்து இருக்கிறேன். தேதி பார்த்து எடுக்க வசதியாக இருப்பதால். வலது பக்கம் நூடுல்ஸ், ஐஸ்க்ரீம் மற்றும் கஸ்டர்ட் வகை சாமான்களை வைத்து இருக்கிறேன். ரோல் செய்து, பார்த்து எடுக்க வசதியாக இருக்கிறது. கீழே நான்கு ட்ராயர்கள் இருக்கின்றன. அதில் மேலே உள்ளதில் கரண்டி, ஸ்பூன் வகைகளை பெரிது, சிறிது என்று தனித் தனியாக வைத்து இருக்கின்றேன். கத்தி, மற்றும் கத்தரிகோல்களையும் தனித் தனியாக வைத்து இருக்கின்றேன். மற்ற ட்ராயர்களில் உபயோகப்படுத்தாத கரண்டிகள், லஞ்ச் பாக்ஸ், புதிய டப்பாக்கள் என்று வரிசையாக வைத்து இருக்கின்றேன். மேலே உள்ளதில் தினமும் சமையலுக்கு தேவையான மசாலா வகைகளை சிறிய டப்பாக்களில் போட்டு வைத்து இருக்கின்றேன்.
கிச்சன் சிங்க்கில் பாத்திரம் கழுவி முடித்த பின்பு, உடனே குப்பைகளை எடுத்துவிட்டு புது கவர் மாற்றி வைத்து விடுவேன். சிங்க்கையும் உடனுக்குடன் கழுவி விடுவதால் அழுக்கு படியாமல் இருக்கும். இதன் அருகிலேயே பாத்திரம் கழுவி வைப்பதற்காக இந்த ப்ளாஸ்டிக் கூடை வைத்து இருக்கிறேன். பாத்திரம் கழுவி தண்ணீர் நீங்கிய பின்பு, அதனை அதன் இடத்தில் வைத்து விடுவதால் இந்த இடம் நீட்டாக இருக்கிறது.
மேலே உள்ள கேபினெட்டில் ஒரு பக்கம் கண்ணாடி தட்டுகள், ப்ளாஸ்டிக் சாமான்கள், கப் வகைகளை தனித் தனியாக வைத்து இருப்பதால் தேவைக்கு எடுக்க சுலபமாக இருக்கிறது. வலது பக்கம் தெரிவதில், நான்ஸ்டிக் பேன் வகைகளை தினமும் யூஸ் செய்வது, புதியது என்று தனித் தனியாக வைத்து இருக்கின்றேன். மற்ற கேபினெட்களில் பருப்பு, மாவு, மற்றும் சமையலுக்குத் தேவையான அனைத்து மசாலா வகைகளையும் தனித் தனியாக பெரிய container ல் போட்டு வைத்து இருப்பேன்.
இது தனியாக வாங்கியது. இதில் மிக்ஸி, சாண்ட்விச் மேக்கர், டோஸ்டர் எல்லாம் வைத்து இருக்கிறேன். இதன் அருகில் ப்ரிஜ் இருக்கிறது.
இந்த கிச்சனில் ஒரு சிறிய இடம் கூட வேஸ்ட் செய்யாமல் அழகாக வடிவமைத்து இருக்கும் விதம் எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது.
0 comments:
Post a Comment