- வெள்ளை ரவை - கால் கிலோ
- கேரட் - 2
- பீன்ஸ் - 10
- பட்டாணி - 50 கிராம்
- பச்சைமிளகாய் - 4
- பெரிய வெங்காயம் - 2
- இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
- மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
- உப்பு
- கறிவேப்பிலை, மல்லி தழை
- சர்க்கரை - 2 தேக்கரண்டி
- தாளிக்க:
- ஏலக்காய் - 2
- கிராம்பு - 3
- பட்டை - சிறு துண்டு
- பிரிஞ்சி இலை - 1
- சோம்பு - ஒரு தேக்கரண்டி
- எண்ணெய் + நெய் - 100 மி.லி
ரவையை வெறும் கடாயில் வறுக்கவும். காய்களை பொடியாக நறுக்கி வைக்கவும். தாளிக்க கூறியுள்ள பொருட்களை லேசாக தட்டி வைக்கவும்
| |
கடாயில் எண்ணெய், நெய் விட்டு தாளிக்கும் பொருட்களை போட்டு தாளிக்கவும்.
| |
பின்னர் காய்கறி, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பின் ரவையின் அளவிற்கு மூன்று பங்கு தண்ணீர், உப்பு, மஞ்சள் தூள், சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும்.
| |
கொதித்ததும் ரவையை சேர்த்து கிளறி அடுப்பை சிம்மில் வைத்து மூடி வைக்கவும். அடிக்கடி கிளறி விடவும். வெந்ததும் மல்லித்தழை வறுத்த முந்திரி தூவி அலங்கரிக்கவும். தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்
|
0 comments:
Post a Comment