Pages

Tuesday, 4 September 2012

பெப்பர் கத்தரிக்காய்



 
  • கத்தரிக்காய் - கால் கிலோ
  • வெங்காயாம் - ஒன்று
  • பச்சை மிளகாய் - 2
  • மசாலா தூள் - ஒரு தேக்கரண்டி
  • மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி
  • கடுகு & உளுத்தம்பருப்பு - தாளிக்க
  • எண்ணெய், உப்பு - தேவையான அளவு


தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.
கத்தரிக்காயை நான்காக நறுக்கிக் கொள்ளவும். பச்சைமிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து வெங்காயம், பச்சைமிளகாய் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் கத்தரிக்காயை போட்டு 2 நிமிடம் வதக்கவும்.
பின்பு மசாலாதூள் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து வேக விடவும். தண்ணீர் வற்றி காய் வேகவில்லை எனில் மேலும் சிறிது நீர் சேர்த்து வேக விடவும்.
காய் வெந்து தண்ணீர் முழுவதும் வற்றியதும் மிளகு தூள் சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும்.
இப்போது சுவையான பெப்பர் கத்தரிக்காய் ரெடி.

இதில் மிளகுதூளின் அளவை அவரவர் காரத்திற்கு ஏற்றாற் போல் கூட்டி குறைத்து கொள்ளவும். இதில் சேர்த்துள்ள மசாலா தூள் நான் குழம்பிற்கு பயன்படுத்துவது. வரமிளகாய், மல்லி விதை, சீரகம், சோம்பு, மிளகு, உளுந்தம்பருப்பு, துவரம் பருப்பு, அரிசி, பட்டை, லவங்கம், அன்னாசிப்பூ இதெல்லாம் சேர்த்து வறுத்து மிஷினில் அரைத்தது. நீங்கள் அவரவர் உபயோகிக்கும் குழம்பு மிளகாய் தூளையே இதற்கு உபயோகப்படுத்தலாம்.

0 comments:

Post a Comment