Pages

Tuesday, 4 September 2012

பொட்டுக்கடலை குருமா



 
  • வெங்காயம் - ஒன்று
  • தக்காளி - ஒன்று
  • பச்சை மிளகாய் - ஒன்று
  • சாம்பார் பொடி - 2 தேக்கரண்டி
  • உப்பு
  • கொத்தமல்லி, கறிவேப்பிலை
  • அரைக்க:
  • பொட்டுக்கடலை - 3 மேசைக்கரண்டி
  • தேங்காய் துருவல் - 2 மேசைக்கரண்டி
  • கசகசா - அரை தேக்கரண்டி
  • பட்டை - ஒரு துண்டு
  • லவங்கம் - 3
  • ஏலக்காய் - ஒன்று
  • தாளிக்க:
  • கடுகு, சீரகம், உளுந்து, கடலைப்பருப்பு
  • எண்ணெய் - 2 மேசைக்கரண்டி


அரைக்க கொடுத்தவற்றை தேவையான நீர் விட்டு நன்றாக அரைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கவும். இதில் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, பின் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
தூள் வகை எல்லாம் சேர்த்து பிரட்டி சிறிது நீர் விடவும்.
இதில் அரைத்த விழுது சேர்த்து தேவையான நீர் விட்டு பச்சை வாசம் போக நன்றாக கொதிக்க விடவும். அடிபிடிக்காமல் அடிக்கடி கிளறி விடவும்.
நன்றாக கொதித்து குருமா பதம் வந்ததும் கொத்தமல்லி தூவி எடுக்கவும். சுவையான பொட்டுக்கடலை குருமா தயார். தோசை, இட்லிக்கு சுலபமான சுவையான குருமா.

0 comments:

Post a Comment