- மத்தி மீன் - 1 கிலோ
- தேங்காய் எண்ணை - 3 ஸ்பூன்
- வாழை இலை - 1
- அரைக்க
- ======
- சின்ன வெங்காயம் - 250 கிராம்
- இஞ்சி&பூண்டு விழுது - 1 ஸ்பூன்
- தக்காளி - 1
- புளி - பாதி எலுமிச்சை அளவு
- பச்சை மிளகாய் - 2
- மிளகு தூள் - 1 ஸ்பூன்
- மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
- சீரகத் தூள் - 1/4 ஸ்பூன்
- கரம் மசாலா தூள் - 2 பின்ச்
- \மல்லி தழை நறுக்கியது - 4 ஸ்பூன்
- கறிவேப்பிலை - சிறிது
- உப்பு - 2 ஸ்பூன்
- முதலில் அரைக்கக் கொடுத்துள்ளவற்றை மிக்சியில் இரண்டு சுற்று சுற்றி மைய்யாக அரைக்காமல் முக்கால் பாகம் அரைத்துக் கொள்ளவும்
- மீனில் இந்த மசாலாவை பிரட்டி உப்பு சரிபார்த்து தேங்காய் எண்ணையும் சேர்த்து பிரட்டி 1 மணிநேரம் ஊறவிடவும்
- பின்பு ஒரு வாயகன்ற மீன் மண்சட்டியில் வாழையிலை வைத்து அதன் மேல் இந்த மீன் மசாலாவோடு சேர்த்து மேலே இன்னொரு வாழைகொண்டு மூடவும்
- முதல் 10 நிமிடம் தீயை மிதமாக வைத்து மீன் சூடுபிடிக்க தொடங்கியதும் தீயை குறைத்து 15 நிமிடம் விடவும்
- தண்ணீர் விட்டிருந்தால் வற்ற தீயை கூட்டி வைத்து இறக்கவும்
Note:
மிகமிக சுவையான மீன் மசாலா கேரளாவில் மீன் தப்பிட்டது என்பார்கள்.அடுப்பில் வைத்து தான் செய்வார்கள் மேலே கணல் இட்டு வேகவைப்பார்கள்..அதன் சுவை நாவிலிருந்து போகாது..இன்று சுலபமாக ஸ்டவ்விலேயே மண்சட்டிய்யிலையென்றாலும் சாதா பாத்திரத்தில் செய்யலாம்..வாழையிலை இல்லையென்றால் தவிர்த்து விடலாம்..விரும்பினால் க்ரில்லர் அவனிலும் சமைக்கலாம்..இது மறுநாளைக்கு தான் சுவை அதிகரிக்கும்.வயதானவர்களுக்கு எண்ணை 1 ஸ்பூன் மட்டும் பிரட்டி செய்து கொடுக்கலாம் மிகவும் சத்தான சமையல் இது
0 comments:
Post a Comment