- பட்டூராவிற்கு:
- மைதா மாவு - 2 கப்
- தயிர் - அரை கப்
- பால் - 3/4 கப்
- எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
- சமையல் சோடா - 2 சிட்டிகை
- உப்பு - அரை தேக்கரண்டி
- எண்ணெய் - வேகவிட
- சன்னாவிற்கு:
- வெள்ளை கொண்டைக்கடலை - ஒரு கப்
- பெரிய வெங்காயம் - 3
- தக்காளி - 2
- பச்சை மிளகாய் - 2
- இஞ்சி - சிறுத்துண்டு
- பூண்டு - 5 பல்
- ஏலக்காய் - 2
- கிராம்பு - 2
- பட்டை - சிறுத் துண்டு
- காரப்பொடி - 2 தேக்கரண்டி
- எண்ணெய் - 3 தேக்கரண்டி
- டால்டா - 2 தேக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
சன்னா பட்டூரா செய்ய தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
| |
பட்டூராவிற்கு கூறப்பட்டுள்ளவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்கு அடித்துப் பிசையவும். அதனை மூன்று மணி நேரம் காற்றுப் புகாமல் மூடி வைக்கவும்.
| |
கொண்டைக்கடலையை 12 மணி நேரம் நீரில் ஊற வைத்து, குக்கரில் தேவையான தண்ணீர் சேர்த்து 5 சத்தம் வரும் வரை வேக விடவும்.
| |
வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு, ஏலம், கிராம்பு, பட்டை எல்லாம் சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும்.
| |
வாணலியில் எண்ணெய், டால்டா சேர்த்து அதில் அரைத்த விழுதை போட்டு எண்ணெய் பிரிய வதக்கவும். அதில் தேவையான உப்பு, காரப்பொடி சேர்க்கவும்.
| |
வெந்த கொண்டைக்கடலையை கரண்டியால் சற்று மசிக்கவும். வேக வைத்த நீரை வீணாக்காமல் கடலையுடன் சேர்த்து வதக்கிய விழுதில் விடவும்.
| |
நன்கு சேர்ந்து கொண்டு கெட்டியானதும் இறக்கவும். மேலே பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை, எண்ணெயில் வதக்கிய பச்சை மிளகாய் சேர்க்கவும். சன்னா தயார்.
| |
இனி பட்டூரா செய்வோம்... பிசைந்த மாவை மேலும் நன்கு அடித்துப் பிசைந்து, பூரியைவிட சற்று திக்கான பட்டூராக்களை இடவும். எண்ணெயில் பொரித்து எடுத்து, சன்னாவுடன் பரிமாறவும்.
|
0 comments:
Post a Comment