- காலிஃப்ளவர் - ஒன்று
- உருளைக்கிழங்கு - 2
- உப்பு - தேவைக்கு
- அரைக்க 1:
- சின்ன வெங்காயம் - 15
- பூண்டு - 10
- இஞ்சி - அரை இஞ்ச்
- தேங்காய் துருவல் - கால் கப்
- மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
- மல்லித் தூள் - 2 தேக்கரண்டி
- அரைக்க 2:
- தக்காளி - 3
- அரைக்க 3:
- முந்திரி - 10
- பால் - 25 மில்லி
- தாளிக்க :
- எண்ணெய் - தேவைக்கு
- பட்டை, கிராம்பு
- சோம்பு - கால் தேக்கரண்டி
- சீரகம் - கால் தேக்கரண்டி
அரைக்க கொடுத்த சின்ன வெங்காயம் கலவை தனியாக அரைக்கவும். தக்காளி தனியாக அரைக்கவும். முந்திரியில் பால் சேர்த்து தனியாக அரைக்கவும்.
| |
காலிஃப்ளவரை நன்கு சுத்தம் செய்து சிறிதளவு உப்பு சேர்த்து அரைவேக்காடு வேக வைத்து எடுக்கவும். உருளையையும் வேக வைத்து எடுக்கவும்.
| |
வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் தாளிக்கும் பொருட்களை சேர்த்து தாளித்து, சின்ன வெங்காயம் சேர்த்து அரைத்த மசாலா கலவை, உப்பு சேர்த்து வதக்கியதும் தக்காளி விழுதையும் சேர்த்து நன்கு சிவக்க வதக்கவும்.
| |
சுருள வதங்கியதும் காலிஃப்ளவர் மற்றும் உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கி 2 தம்ளர் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
| |
கிரேவி பச்சை வாசனை போக கொதித்ததும் அரைத்த முந்திரி விழுது சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும்.
| |
காலிஃப்ளவர் கிரேவி தயார். இது சப்பாத்தி, நாண், பரோட்டாவுக்கு பொருத்தமாக இருக்கும்.
|
0 comments:
Post a Comment