- வெண்டைக்காய்- கால் கிலோ
- வெங்காயம்-2
- பட்டைமிளகாய்-2
- கறிவேப்பிலை- ஒரு கொத்து
- துவரம்பருப்பு- 50 கிராம்
- சாதம்- 2 கப்
- உப்பு--தேவைக்கு
- எண்ணெய்- ஒரு குழிகரண்டி
- மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
- சீரகத்தூள்- அரை ஸ்பூன்
- பூடு- 8 பல்
- தக்காளி- 2
- பச்சைமிளகாய்-2
- பெருங்காயத்தூள்- ஒரு சிட்டிகை
- பருப்பை அலசி அதில் தக்காளீ, பச்சைமிளகாய், பூடு, தூள் வகைகள் சேர்த்து வேக வைக்கவும்.
- வெண்டைக்காயை நறுக்கிகொள்ளவும் (ஒரு இன்ச் அளவு)
- வெறும் கடாயில் வெண்டைக்காயை உப்பு மற்றும் எண்ணெய் சேர்த்து வதக்கிக்கொள்ளவும்.
- பசை நீங்கியதும் வெங்காயம், பட்டைமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து சுருள வதக்கவும்.
- பின் வேக வைத்த பருப்பை சேர்த்து ஒரு கொதிவிடவும்.
- பின் சாதத்தை கொட்டி கிளறி விடவும்.
- விரும்பினால் நெய்யில் தாளித்த முந்திரியை பரிமாறும் போது சேர்க்கவும்.
0 comments:
Post a Comment