- 1. கொத்தமல்லி இலை - 1/2 கட்டு
- 2. சின்ன வெங்காயம் - 10
- 3. பெரிய வெங்காயம் - 1/2
- 4. தக்காளி - 1
- 5. மிளகாய் வற்றல் - 4
- 6. மிளகு - 1 தேக்கரண்டி
- 7. தனியா - 1/2 மேஜைக்கரண்டி
- 8. சீரகம் - 1/2 தேக்கரண்டி
- 9. பூண்டு - 5 பல்
- 10. புளி - 1 சின்ன எலுமிச்சை அளவு
- 11. கடுகு, உளுந்து, கடலைபருப்பு - தாளிக்க
- 12. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
- 13. தேங்காய் துருவல் - 3 மேஜைக்கரண்டி
- 14. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
- 15. உப்பு
- கடாயில் 2 மேஜைக்கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்ததும் மிளகு, சீரகம், தனியா, மிளகாய் வற்றல், சேர்த்து சிவந்ததும் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- சின்ன வெங்காயம் வதங்கியதும் தேங்காய் சேர்த்து வதக்கவும்.
- பின் தக்காளி மற்றும் மல்லி இலை சேர்த்து வதக்கவும்.
- இவை எல்லாம் ஆறிய பின் மிக்ஸியில் நைசாக அரைக்கவும்.
- கடாயில் மீதம் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு தாளிக்கவும்.
- இத்துடன் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும்.
- இதில் அரைத்த விழுது சேர்த்து ஒரு கொதி வந்ததும் புளி கரைசல் மற்றும் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கொதித்து எண்ணெய் பிரியும் போது எடுக்கவும்.
- சுவையான கொத்தமல்லி இலை குழம்பு தயார். சாதத்துடன் அருமையாக இருக்கும்.
0 comments:
Post a Comment