- பாசிபருப்பு - ஒரு கப்
- காய்ந்த மிளகாய் - 3 அல்லது 4
- சிறிய வெங்காயம் - கால் கப்
- பெரிய வெங்காயம் - ஒன்று
- கறிவேப்பிலை கொத்தமல்லி - தேவையான அளவு
- சீரகம் - அரை தேக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - தேவையான அளவு
பாசிபருப்பை நன்கு ஊற வைக்கவும். சிறிய வெங்காயத்தை உரித்துக் கொள்ளவும்
| |
பாசிப்பருப்பை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி அதனுடன் மிளகாய், சிறிய வெங்காயம், கறிவேப்பிலை, சீரகம், உப்பு சேர்க்கவும்
| |
தேவையான அளவு நீர் சேர்த்து நன்கு அரைக்கவும்.
| |
அதில் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், கொத்தமல்லி தழை சேர்த்து நன்கு கலந்து விடவும்
| |
தோசைக்கல்லை சுட வைத்து அதில் மாவை தோசையாக வார்க்கவும். சுற்றிலும் எண்ணெய் விடவும்
| |
சிவந்ததும் திருப்பி போட்டு வேக விடவும். இது நன்கு வேக வேண்டும். மிதமான தீயிலேயே சுட வேண்டும்.
| |
சூடான சத்தான பாசிபருப்பு தோசை ரெடி.
|
விரும்பினால் இஞ்சி சேர்க்கலாம். கேரட், தேங்காய் போன்றவையும் குழந்தைகளுக்கு கொடுக்கும் போது சேர்க்கலாம். வளரும் குழந்தைகளுக்கு மிகவும் சத்தான தோசை இது. பச்சை மிளகாய் சேர்த்து செய்தால் ஆம்லெட் போலவே இருக்கும். சூடாக சாப்பிட வேண்டும்.
0 comments:
Post a Comment