Pages

Tuesday, 24 July 2012

செய்தி குறிப்பு


சீனக் கடல் பகுதியில் புதிய ‘ஷன்ஷா’ நகரம்

பதிவு செய்த நாள் - July 24, 2012 4:21 pm
சர்ச்சைக்குரிய தென் சீனக் கடல் பகுதியில் உள்ள தீவுகளை நிர்வகிப்பதற்காக புதிய நகரத்தை சீன அரசு உருவாக்கியுள்ளது.
ஷன்ஷா என பெயரிடப்பட்டுள்ள அந்நகரத்தை யோங்சிங் தீவில் சீனா அமைத்துள்ளது.
இந்த நகரம் முறைப்படி செயல்படத் தொடங்குவதைக் குறிக்கும் வகையில் பிரமாண்ட விழாவை அரசு நடத்தியுள்ளது. இவ்விழாவை கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஹைனான் மாகாண குழுவின் தலைவர் தொடங்கி வைத்தார். மேலும் சீனாவின் பல்வேறுத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
பொருளாதார முன்னேற்றத்திற்கும், மக்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்தவும் ஷன்ஷா நகர அரசு பாடுபடும் என சீனா அறிவித்துள்ளது.
இதனிடையே தென் சீனக் கடலில் உள்ள தீவுகளில் தங்கள் உரிமையை நிலைநாட்டும் வகையில் புதிய ராணுவ படைபிரிவு ஒன்றை சீனா அமைத்துள்ளது. தென் சீனக் கடலுக்கு பிலிப்பைன்ஸ், மலேசியா உள்ளிட்ட நாடுகள் உரிமை கொண்டாடும் நிலையில் சீனாவின் இந்த நடவடிக்கைகள் மேலும் சர்ச்சையை கிளப்பியுள்ளன.

வருமான வரி கணக்கு தாக்கல் – எளிய 2 திட்டங்கள் அறிமுகம்

பதிவு செய்த நாள் - July 24, 2012 8:30 pm
வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இரண்டு எளிய திட்டங்கள் அறிமுகமாக உள்ளன. வருமான வரி தாக்கல் செய்பவரின் வீட்டுக்கே வந்து சந்தேகங்கள் நிவர்த்தி செய்யப்படும் விதமாக திட்டங்கள் உள்ளன.
இதற்கான சேவையைப் பெற www.trpscheme.com என்ற இணையதள முகவரியில் Register For Home Visit என்ற பகுதியில் பதிவு செய்யவேண்டும். இதன் மூலம் வரி தாக்கல் செய்பவருக்கு வசதியான நேரம், நாளில் வரி நிபுணர் வீட்டுக்கு வந்து உதவுவார்.
அதே போல் வரி தாக்கல் சந்தேகங்களுக்கு தொலைபேசி, இ-மெயிலில் 24 மணி நேரத்தில் அதற்கான பதிலை தெரிந்து கொள்ள www.trpscheme.com-ல் Online Tax Help பகுதியில் பதிவு செய்யதால் போதும். தற்போது சென்னை உள்ளிட்ட நாட்டின் 10 நகரங்களில் மட்டுமே இவ்வசதி கிடைக்கும்.மேலும் விவரங்களுக்கு 1800-10-23738 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

0 comments:

Post a Comment