Pages

Tuesday, 24 July 2012

ஆலு பரோட்டா



 
  • கோதுமை மாவு - ஒரு கப்
  • உருளைக்கிழங்கு - 2
  • பச்சை மிளகாய் - 2
  • இஞ்சி - சிறிதளவு
  • மல்லி இலை - சிறிதளவு
  • சீரக தூள் - கால் தேக்கரண்டி
  • கரம் மசாலா தூள் - அரை தேக்கரண்டி
  • ஆம்சூர் பொடி - அரை தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
  • உப்பு - தேவையான அளவு


கோதுமை மாவை உப்பு சேர்த்து சப்பாத்தி பதத்திற்கு பிசைந்து அரைமணி நேரமாவது மூடி வைத்து ஊற விடவும். உருளையை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். இஞ்சி, மிளகாய் மற்றும் மல்லி இலை சேர்த்து கொரகொரப்பாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
அரைத்தவற்றுடன் எல்லா தூள் வகைகள், உப்பு சேர்த்து உருளையும் சேர்த்து பிசைந்துக் கொள்ளவும். இதுவும் சப்பாத்தி மாவு பதத்திற்கு இருக்க வேண்டும். சிறு சிறு உருண்டைகளாக பிடித்து வைக்கவும். அதே எண்ணிக்கை மாவுருண்டைகளை பிடித்து வைக்கவும். மாவுருண்டை உருளை உருண்டையை விட பெரியதாக இருத்தல் அவசியம்.
மாவை எடுத்து சிறிதளவு தேய்த்து அதில் கலவையை வைத்து மூடவும். நன்றாக மூடியவுடன் கையால் தட்டிய பின்னர் திரட்டவும்.
கல் சூடானதும் சிறிதளவு எண்ணெய் தேய்த்து (விருப்பப்பட்டால்) பராத்தாவை போட்டு நன்கு வெந்ததும் மறுப்புறம் திருப்பி போட்டு எடுக்கவும். இப்படி உப்பி வரும்.
தயிரில் சாட் மசாலா (விருப்பப்பட்டால்) தூவி, ஊறுகாயுடன் பரிமாறவும். குழந்தைகளுக்கென்றால் பரிமாறும் முன்பு சிறிதளவு வெண்ணெய் தேய்த்து பரிமாறவும். இங்கே உள்ள ஊறுகாய் அன்பரசி செய்துக் காட்டிய மிளகாய் ஊறுகாய். இந்த பராத்தவிற்கு அமர்களமாக இருந்தது.

0 comments:

Post a Comment