- மஷ்ரூம் - 10/12
- பெரிய வெங்காயம் - ஒன்று
- பச்சை மிளகாய் - 3
- பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
- வெங்காயத்தாள் - ஒன்று
- சோயா சாஸ் - 4 தேக்கரண்டி
- மிளகுத்தூள் - அரை தேக்கரண்டி
- வடித்து ஆறவைத்த சாதம் - 1 1/2 கப்
- உப்பு - 2 சிட்டிகை
- எண்ணெய் - 2 தேக்கரண்டி
முதலில் மஷ்ரூமை சுத்தப்படுத்தி, மெல்லிய வில்லைகளாக நறுக்கி வைக்கவும். பெரிய வெங்காயத்தை உரித்து, நீளவாக்கில் நறுக்கி வைக்கவும். பச்சைமிளகாயை மிகப்பொடியாகவும், வெங்காயத்தாளை பொடியாகவும் நறுக்கி வைக்கவும்.
| |
ஒரு பெரிய வாயகன்ற கடாயில், எண்ணெய் விட்டு சூடாக்கவும். முதலில் பச்சை மிளகாய் போட்டு சில நொடிகள் வதக்கி பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
| |
இதனுடன் பூண்டு விழுது சேர்த்து, சிறிது நேரம் வதக்கி, பின்னர் மஷ்ரூம் சேர்த்து வதக்கவும்.
| |
எல்லாமுமாக சிறிது வதங்கிய நிலையில், வெங்காயத்தாளையும் சேர்த்து ஒரு வதக்கு வதக்கவும்.
| |
அதனுடன் துளி உப்பு சேர்த்து சாதத்தை கொட்டி கிளறவும்.
| |
கூடவே மிளகுத்தூள், சோயா சாஸ் சேர்த்து அடுப்பை அணைத்துவிட்டு, கடாயின் சூட்டிலேயே நன்கு சாதம் உடைந்து விடாதவாறு பார்த்து கலந்து விடவும். உப்பு சரிப்பார்த்து தேவைப்பட்டால் சிறிது சேர்த்துக் கொள்ளவும்.
| |
பிறகு மேலும் சிறிது நறுக்கிய வெங்காயத்தாள் சேர்த்து கலந்து விட்டு பரிமாறவும். இப்போது கிட்ஸ் மஷ்ரூம் ஃப்ரைட் ரைஸ் தயார்!
|
இங்கே காரம், குழந்தைகளுக்காக குறைவாக கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் காரம் விரும்புகிறவர்கள், பச்சை மிளகாயின் எண்ணிக்கையை கூட்டிக் கொள்ளலாம். இல்லையானால், க்ரீன் சில்லி சாஸ் இருந்தாலும் ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி வரை வதக்கும் போது சேர்த்துக் கொள்ளலாம். முட்டை சேர்க்க விரும்புவர்கள், இரண்டு முட்டையை உடைத்து சிறிது உப்பு, மிளகுத்தூள் கலந்து அடித்து, 'ஸ்க்ராம்பிள்டு எக்'காக தயார் செய்து, இந்தக்கலவையில் கொட்டி கலந்து விட்டுக் கொள்ளலாம்.
0 comments:
Post a Comment