Pages

Wednesday, 8 August 2012

மசாலா பப்படி சாட்



 
  • பப்படி - 6
  • சேவ்
  • வெங்காயம் - ஒன்று
  • தக்காளி - ஒன்று
  • கொத்தமல்லி தழை
  • மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
  • மல்லி தூள் - ஒரு தேக்கரண்டி
  • கரம் மசாலா - கால் தேக்கரண்டி
  • வெள்ளை கொண்டைக்கடலை - ஒரு கப்
  • உருளை - 2
  • பச்சை மற்றும் இனிப்பு சட்னி
  • தயிர்
  • மாதுளை முத்துக்கள்
  • சாட் மசாலா
  • உப்பு
  • எண்ணெய் - 2 தேக்கரண்டி


பப்படி, பச்சை மற்றும் இனிப்பு சட்னி செய்து தயாராக வைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கி தக்காளி சேர்த்து வதக்கவும்.
இதில் சாட் மசாலா தவிர எல்லா தூள் வகையும் சேர்த்து பிரட்டவும்.
பின் வேக வைத்த உருளை சேர்த்து பிரட்டவும்.
கடைசியாக வேக வைத்த கடலை சேர்த்து பிரட்டி கொத்தமல்லி தழை தூவி எடுக்கவும்.
பாத்திரத்தில் கொஞ்சம் பப்படி உடைத்து போட்டு அதில் இந்த கலவை கொஞ்சம் சேர்த்து பிரட்டவும்.
இத்துடன் கொஞ்சம் தயிர் சேர்த்து பிரட்டவும்.
பரிமாறும் தட்டில் இன்னும் 3 பப்படி உடைத்து போட்டு அதன் மேல் கலவை வைத்து தேவைக்கு இனிப்பு மற்றும் பச்சை சட்னி ஊற்றவும்.
பின் இன்னும் சிறிது தயிர் ஊற்றி மேலே விருப்பம் போல் சேவ், மாதுளை முத்துக்கள், மல்லி தழை, சாட் மசாலா தூவி பரிமாறவும். சுவையான மசாலா பப்படி சாட் தயார்.

சாட்டில் எப்போதும் இப்படி தான் செய்ய வேண்டும் என்று எதுவும் இல்லை. நம் விருப்பம் போல அளவுகள் மாற்றலாம். காம்பினேஷன்ஸ் ட்ரை பண்ணலாம். இதிலேயே கூட மேலே பச்சை வெங்காயமும் பொடியாக நறுக்கி தூவலாம். உருளை பட்டாணி கலவை சற்று கிரேவி போல் இருந்தால் இன்னும் நல்லா இருக்கும். நான் பப்படி நமத்து விடும் என்பதால் அப்படி சேர்க்கவில்லை. இந்த மசாலா பப்படி சாட் சூடாக சாப்பிட ஏற்றது. இதில் சேவுக்கு பதில் பூந்தி பயன்படுத்தலாம். மாதுளை முத்துக்கள், சாட் மசாலா எல்லாம் ஆப்ஷனல் தான்.

0 comments:

Post a Comment