Pages

Sunday, 5 August 2012

சன்னா சாட்



 
  • இனிப்பு புளிப்பு சட்னிக்கு:
  • பேரீச்சம் பழம் - 6
  • புளி - சிறிது (ஒரு மேசைக்கரண்டி அளவு)
  • வெல்லம் அல்லது சர்க்கரை - ஒரு மேசைக்கரண்டி
  • உப்பு - சிட்டிகை
  • சீரகம் - அரை தேக்கரண்டி (வறுத்து பொடித்தது)
  • மிளகாய் வற்றல் - 2 அல்லது மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
  • சாட் செய்ய:
  • சன்னா - 2 கப்
  • உப்பு - தேவைக்கு
  • கொத்தமல்லி இலை
  • வெங்காயம் - ஒன்று (சிறிது)
  • தக்காளி - ஒன்று சிறிது [விரும்பினால்]
  • சாட் மசாலா - தேவைக்கு
  • எலுமிச்சை சாறு - 2 மேசைக்கரண்டி
  • பொரி - அரை கப் [விரும்பினால்]
  • சேவ் - தேவைக்கு


சட்னிக்கு டேட்ஸ் விதை நீக்கி, புளி மற்றும் மிளகாய் வற்றல் சேர்த்து சூடான நீர் விட்டு ஊற விட்டு மற்றவையும் சேர்த்து நைசாக அரைக்கவும்.
சன்னாவை நன்றாக ஊற வைத்து உப்பு சேர்த்து பஞ்சு போல வேக வைத்து எடுக்கவும். வெங்காயம் பொடியாக நறுக்கவும். தக்காளி பொடியாக நறுக்கி உள்ளே உள்ள சதை பகுதியை நீக்கவும்.
இனி வேக வைத்த சன்னாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் ஒரு கப் சன்னாவிற்கு 2 மேசைக்கரண்டி அளவு சட்னி சேர்த்து கலந்து விடவும்.
பின் நறுக்கிய வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி இலை, தேவைக்கு உப்பு சேர்த்து கலக்கவும்.
கடைசியாக பரிமாறும் போது பொரி சேர்க்க விரும்பினால் சேர்த்து பிரட்டவும்.
இந்த கலவையை கப்பில் போட்டு எலுமிச்சை சாறு பிழிந்து மேலே சாட் மசாலா மற்றும் சேவ் தூவி பரிமாறவும்.
பொரி சேர்க்காமல் சேவ் மற்றும் சாட் மசாலா சேர்த்தும் பரிமாறலாம். சுவையான வீட்டிலேயே செய்ய கூடிய ஹெல்தியான சாட் தயார்.

விரும்பினால் இதில் சாட்க்கு பயன்படுத்தும் குட்டி குட்டி பூரியை ஒன்றிரண்டாக பொடித்து போடலாம். உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி மசித்து சேர்க்கலாம். மேலே தூவ மாதுளை முத்துக்கள், வறுத்த வேர்கடலை கூட பயன்படுத்தலாம். காரம் விரும்பினால் பச்சை மிளகாய் பொடியாக நறுக்கி சேர்க்கலாம். அல்லது பச்சை சட்னி (கொத்தமல்லி மற்றும் புதினா கலந்து அரைப்பது) அதையும் ஒரு மேசைக்கரண்டி கலந்து கொள்ளலாம். பொரி சேர்த்தால் தாமதிக்காமல் பரிமாறிவிட வேண்டும்.

0 comments:

Post a Comment