- நெய் மீன் - 5 துண்டு
- மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
- கார்ன் ப்ளார் - ஒரு தேக்கரண்டி
- ப்ரெட் க்ரம்ப்ஸ் - தேவையானளவு
- ஆயில் - பொரிப்பதற்கு தேவையான அளவு
- மாவிற்கு:
- காஷ்மீர் மிளகாய் தூள் - 1 1/2 தேக்கரண்டி
- இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
- மிளகு தூள் - அரை தேக்கரண்டி
- சாட் மசாலா - கால் தேக்கரண்டி
- சீரக தூள் - கால் தேக்கரண்டி
- கார்ன் ப்ளார் - 2 தேக்கரண்டி
- அரிசி மாவு - ஒரு தேக்கரண்டி
- மைதா மாவு - ஒரு தேக்கரண்டி
- சோயா சாஸ் - கால் தேக்கரண்டி
- முட்டை - ஒன்று
- எலுமிச்சை சாறு - அரை தேக்கரண்டி
- கேசரி பவுடர் - சிறிதளவு
- உப்பு - தேவையானளவு
மீனை நன்கு சுத்தம் செய்து மஞ்சள் தூள் உப்பு சேர்த்து இட்லி பாத்திரத்தில் வேக வைக்கவும். மீன் ஆறிய பிறகு முள் எல்லாம் நீக்கி விட்டு நன்றாக உதிர்த்து விடவும்.
| |
உதிர்த்த மீனில் கார்ன் ப்ளார் சேர்த்து மெதுவாக பிசையவும். பின் விரல் நீளத்திற்கு சிறு சிறுத் துண்டுகளாக உருட்டி வைக்கவும்.
| |
மாவிற்கு கூறிய பொருட்கள் அனைத்தையும் சேர்த்து கடைசியாக முட்டை சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைக்கவும்.
| |
மீனை மாவில் முக்கி ப்ரெட் க்ரம்ப்ஸில் புரட்டி எடுத்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
| |
சுவையான பிங்கர் பிஷ் ரெடி.
|
0 comments:
Post a Comment