Pages

Monday, 6 August 2012

BBQ சிக்கன்



 
  • கோழிக் கால் - அரைக் கிலோ
  • ஸ்பிரிங்க் ஆனியன் - ஒரு கட்டு
  • வெங்காயம் - ஒன்று
  • டொமெட்டோ பியூரி - 2 மேசைக்கரண்டி
  • மஞ்சள் தூள் - சிறிதளவு
  • மிளகாய் தூள் - அரை மேசைக்கரண்டி
  • மிளகு தூள் - அரை மேசைக்கரண்டி
  • பார்பிக்யூ மசாலா - அரை தேக்கரண்டி
  • எலுமிச்சை - 2
  • இஞ்சி பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டி
  • தயிர் - ஒரு மேசைக்கரண்டி
  • தனியா தூள் - கால் மேசைக்கரண்டி
  • உப்பு - தேவையான அளவு
  • எண்ணெய் - வறுக்க


தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஸ்பிரிங்க் ஆனியன், வெங்காயத்தை பெரிய துண்டுகளாக நறுக்கி மிக்சியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். எலுமிச்சை சாறு பிழிந்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
கோழிக்காலை சுத்தம் செய்து அதனுடன் அரைத்த விழுது, மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது, தயிர், எலுமிச்சை சாறு, டொமெட்டோ ப்யூரி மற்ற மசாலா தூள்கள் அனைத்தையும் கலந்து சிக்கனில் தடவி ஆங்காங்கே கத்தியால் கீறி விட்டு ஒரு மணிநேரம் ஊற வைக்கவும்.
பார்பிக்யூ அடுப்பில் தீயை மூட்டி க்ரில்களில் ஊற வைத்த கோழி கால்களை வைத்து மேலே எண்ணெய் ஊற்றி வேக வைக்கவும்.
சிறிது நேர இடைவெளிக்கு பிறகு திருப்பி போட்டு வேக வைக்கவும். நன்கு வெந்ததும் எடுத்து எலுமிச்சை சாறு பிழிந்து பரிமாறவும். இது சாலட், ப்ரெஞ்ச் ப்ரை, பிரியாணி, ஜீரா ரைஸ், கீ ரைஸ் போன்றவற்றுடன் சாப்பிட மிகவும் பொருத்தமாக இருக்கும்.

0 comments:

Post a Comment