- அரிசி - 4 டம்ளர்
- பெரிய வெங்காயம் - 6
- காரட் - 4
- பீன்ஸ் - 25
- குடை மிளகாய் - ஒன்று
- உருளைக்கிழங்கு - ஒன்று
- சின்ன பச்சை மிளகாய் - 12
- இஞ்சி - 3 அங்குலத் துண்டு
- பூண்டு - 15 பல்
- தக்காளி - 2
- கசகசா - ஒரு மேசைக்கரண்டி
- ஏலக்காய் - 3
- கிராம்பு - 4
- எண்ணெய் - ஒரு கப்
- பிரிஞ்சி இலை - ஒன்று
- பட்டை - 2 அங்குலத் துண்டு
- ரோஜா மொக்கு - ஒன்று
- சோம்பு - அரை மேசைக்கரண்டி
- கல் உப்பு - 2 1/2 மேசைக்கரண்டி
- மீல் மேக்கர் - 35
- புதினா- கால் கப்
பீன்ஸை இரண்டு அங்குல துண்டுகளாக நறுக்கி நீளவாக்கில் கீறி வைக்கவும். வெங்காயத்தை மெல்லியதாக நறுக்கவும். குடைமிளகாயை சிறிது சிறிதாக நறுக்கவும். காரட்டை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். உருளைக்கிழங்கையும் நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
| |
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க வைத்து அதில் மீல் மேக்கரை போட்டு 10 நிமிடம் கழித்து தனியாக ஒரு தட்டில் எடுத்து வைக்கவும்.
| |
இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு ஒன்றிரண்டாக அரைத்துக் கொள்ளவும்.
| |
குக்கரில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பிரிஞ்சி இலை, கிராம்பு, ஏலக்காய், பட்டை, ரோஜா மொக்கு ஆகியவற்றை போட்டு 15 நொடி வதக்கிய பிறகு நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
| |
வெங்காயம் வதங்கியப் பிறகு அரைத்த இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய் விழுது போட்டு வதக்கி விட்டு கசகசா சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
| |
பிறகு நறுக்கி வைத்திருக்கும் காய்கறி எல்லாவற்றையும் போட்டு 2 நிமிடம் 15 நொடி வரை வதக்கவும்.
| |
வதங்கிய காய்கறியில் 8 டம்ளர் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி வைத்து வேக விடவும்.
| |
5 நிமிடம் கழித்து உப்பு சேர்த்து கிளறி விட்டு அரிசியை களைந்து அதில் போட்டு கிளறி ஒரு தட்டு வைத்து மூடி விடவும்.
| |
ஒரு நிமிடத்துக்கு ஒரு முறை திறந்து கிளறி விடவும். இதைப் போல ஆறுமுறை கிளறவும்.
| |
கிளறிய பிறகு வேக வைத்து எடுத்து வைத்திருக்கும் மீல் மேக்கரை சேர்த்து கிளறி விடவும்.
| |
கடைசியில் நறுக்கிய தக்காளி, கொத்தமல்லித்தழை மற்றும் புதினா சேர்த்து இறக்கி விடவும்.
| |
சுவையான வெஜிடபுள் ரைஸ் தயார்
|
0 comments:
Post a Comment