- வெள்ளை கொண்டைக்கடலை - கால் கிலோ
- உருளைக்கிழங்கு - 2
- பெரிய வெங்காயம் - 2
- இஞ்சி, பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டி
- தக்காளி - 3
- சன்னா மசாலா பவுடர் - ஒன்றரை மேசைக்கரண்டி
- உப்பு - ஒரு மேசைக்கரண்டி
- எலுமிச்சை சாறு - ஒரு தேக்கரண்டி
- எண்ணெய் - 6 மேசைக்கரண்டி
ஒரு பாத்திரத்தில் வெள்ளை கொண்டைக்கடலையை போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 8 மணிநேரம் ஊற வைக்கவும். மற்ற அனைத்து தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.
| |
குக்கரில் ஊற வைத்திருக்கும் கொண்டைக்கடலையை போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி அதே குக்கரில் ஒரு பாத்திரத்தில் உருளைக்கிழங்கை போட்டு தண்ணீர் ஊற்றாமல் இரண்டையும் வைக்கவும்.
| |
குக்கரை மூடி வெய்ட் போட்டு 25 நிமிடம் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
| |
வேக வைத்த உருளைக்கிழங்கை எடுத்து தோல் உரித்து சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பெரிய வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 2 தக்காளியை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
| |
ஒரு வெங்காயம் மற்றும் ஒரு தக்காளி இரண்டையும் துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்துக் எடுத்துக் கொள்ளவும்.
| |
அதே குக்கரில் 3 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கின வெங்காயம் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும். பிறகு நறுக்கிய தக்காளியை போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.
| |
வெங்காயம் மற்றும் தக்காளி வதங்கியதும் வேக வைத்து நறுக்கின உருளைக்கிழங்கு போட்டு ஒரு நிமிடம் பிரட்டவும். அதன் பிறகு இஞ்சி, பூண்டு விழுது, சன்னா மசாலா பவுடர் போட்டு 2 நிமிடம் பிரட்டி விடவும்.
| |
பிறகு அரைத்து வைத்திருக்கும் வெங்காயத் தக்காளி விழுதை போட்டு உப்பு சேர்த்து பிரட்டி மேலே 3 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி 4 நிமிடம் நன்கு பிரட்டி விடவும்.
| |
பிறகு வேக வைத்த கொண்டைக்கடலையை போட்டு அதில் உள்ள தண்ணீரை ஊற்றி ஒரு முறை கிளறி 10 நிமிடம் கொதிக்க விடவும்.
| |
கொண்டைக்கடலையுடன் மசாலா ஒன்றாக சேர்ந்து சற்று திக்காக ஆனதும் 5 நிமிடம் கழித்து அடுப்பில் இருந்து இறக்கவும். பிறகு ஆறியதும் மேலே எலுமிச்சை சாறு ஊற்றவும் அல்லது அம்சூர் பொடி தூவவும்.
| |
இப்பொழுது சூடான சன்னா மசாலா தயார். இந்த சன்னா மசாலாவை சப்பாத்தி மற்றும் நாண் வகைகளுடன் சேர்த்து சாப்பிடலாம். விரும்பினால் மேலே கொத்தமல்லித் தழை தூவவும்.
|
0 comments:
Post a Comment