Pages

Wednesday, 25 July 2012

நாண்



 
  • மைதா மாவு - 2 கப்
  • பேக்கிங் பவுடர் - 3/4 தேக்கரண்டி
  • சோட்டா மாவு - கால் தேக்கரண்டி
  • பால் - அரை கப்புக்கும் சற்று குறைவு
  • தயிர் - அரை கப்
  • உப்பு - தேவைக்கு
  • சர்க்கரை - அரை தேக்கரண்டி


மைதா மாவுடன் பேக்கிங் பவுடர் மற்றும் சோட்டா மாவை (இட்லி சோடா) நன்றாக கலந்து வைக்கவும். இதில் சர்க்கரை மற்றும் உப்பையும் கலந்து விடவும்.
இதில் வெது வெதுப்பான பால் மற்றும் தயிரை ஊற்றி கைகளால் லேசாக கலந்து விடவும்.
மாவை அழுத்தி பிசைய தேவை இல்லை. சற்று ஈரப்பதம் அதிகமாகவே இருக்கும். கை விரல்களால் அப்படியே கலந்து திரட்டி உருட்டி வைத்தால் போதும். இதை மூடி போட்டு 4 மணி நேரம் வைக்கவும்.
பின் மாவை உருண்டைகளாக பிரித்து வைக்கவும். அவற்றை சப்பாத்தி இடுவது போல் மைதா தூவி தேய்த்து வைக்கவும். ஒரு கெட்டியான அலுமினிய தவா அல்லது நாண்ஸ்டிக்கில் தேய்த்து வைத்த நாணின் மேலே நீர் தெளித்து நீர் உள்ள பக்கம் தவாவில் படுவது போல் ஒட்டி விடவும். இதை மூடி 1 நிமிடம் மிதமான தீயில் வேக விடவும்.
நன்றாக ஆங்காங்கே உப்பி வரும். நாண்ஸ்டிக்காக இருந்தால் நாணை எடுத்து மேல் பக்கத்தை நேரடியாக தீயில் திருப்பி போடவும். [அலுமினியம் தவாவாக இருந்தால் நாண் நன்றாக ஒட்டி இருக்கும், அதனால் எடுக்காமல் அப்படியே தவாவோடு திருப்பி நெருப்பில் வாட்டலாம்]. இப்போது சுவையான சாஃப்ட்டான நாண் தயார்.

விரும்பினால் சிறிது வெண்ணெயை நாண் மேலே தடவலாம். பால் வெது வெதுப்பாக இருக்க வேண்டும். புளிக்காத தயிர் ரூம் டெம்பரேச்சரில் இருப்பது அவசியம். மாவுடன் பேக்கிங் பவுடர் மற்றும் சோட்டா மாவு சரியாக கலப்பது முக்கியம். நாண்ஸ்டிக்கை விட நல்ல அலுமினிய தவா சிறந்தது.

0 comments:

Post a Comment