- தக்காளி - ஐந்து
- தேங்காய் துருவல் - அரை கப்
- மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
- மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி
- உப்பு - தேவைக்கு
- பொட்டுக்கடலை - கால் கப்
- கசகசா - ஒரு தேக்கரண்டி
- சோம்பு - ஒரு தேக்கரண்டி
- பெரிய வெங்காயம் - ஒன்று
- பூண்டு - பத்து பல்
- தாளிக்க:
- பட்டை - மூன்று துண்டு
- கிராம்பு - மூன்று
- கறிவேப்பிலை - ஒரு கொத்து
- எண்ணெய் - ஒரு குழிக்கரண்டி (தேவைக்கு)
தக்காளி, வெங்காயம் பூண்டு ஆகியவற்றை பொடியாக நறுக்கவும்.
| |
வாணலியில் பொட்டுக்கடலை, சோம்பு, கசகசா போட்டு வாட்டி மிக்ஸியில் பொடிக்கவும்.
| |
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு தாளித்து அதோடு வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
| |
அதில் தேங்காய் துருவலை சேர்த்து வதக்கவும்.
| |
வதங்கியதும் தக்காளி, உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து தக்காளியின் ஈரம் சுண்டும் வரை வதக்கவும்.
| |
கடைசியாக பொட்டுக்கடலை பொடியை சேர்த்து பொல பொலவென்று வரும் வரை கிளறி இறக்கவும். பொடி சேர்த்ததும் வாணலியில் பிடிக்கும் அடிக்கடி கிளற வேண்டும்
| |
சுவையான தக்காளி பொடிமாஸ் தயார்.
|
0 comments:
Post a Comment