- 1. பாசுமதி அரிசி - 2 கப்
- 2. மஷ்ரூம் - 10 - 15
- 3. வெங்காயம் - 1 பெரிது
- 4. தக்காளி - 1 பெரிது
- 5. பச்சை மிளகாய் - 2
- 6. தயிர் - 2 மேஜைக்கரண்டி
- 7. மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
- 8. கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி
- 9. பிரியாணி மசாலா - 1 தேக்கரண்டி
- 10. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
- 11. இஞ்சி பூண்டு விழுது - 1 மேஜைக்கரண்டி
- 12. தேங்காய் பால் - 2 கப்
- 13. உப்பு
- தாளிக்க:
- 14. பிரியாணி இலை - 1
- 15. அன்னாசி பூ - 1/2
- 16. ஏலக்காய் - 2
- 17. எண்ணெய் - 4 மேஜைக்கரண்டி
- அரைக்க:
- 18. வெங்காயம் - 1/2
- 19. தக்காளி - 1/2
- 20. மிளகு - 1 தேக்கரண்டி
- 21. சீரகம் - 1/2 தேக்கரண்டி
- 22. கறிவேப்பிலை - 1 கொத்து
- அரைக்க வேண்டிய பொருட்களை அரைத்து வைக்கவும். நீர் சேர்க்க தேவை இல்லை. சேர்ப்பதானால் மிக குறைவாக சேர்க்கவும்.
- அரிசியை கழுவி ஊற வைக்கவும்.
- மஷ்ரூம் சுத்தம் செய்து 4 துண்டாக நறுக்கி வைக்கவும்.
- வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் நறுக்கி வைக்கவும்.
- பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பிரியாணி இலை, ஆன்னாசி பூ, ஏலக்காய் தாளிக்கவும்.
- இதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பின் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் சிவந்ததும் தக்காளி, சிறிது உப்பும் சேர்த்து வதக்கவும்.
- தக்காளி பாதி வதங்கியதும் அரைத்த விழுது சேர்த்து வதக்கவும். இதை மூடி வைத்து இடை இடையே எடுத்து கலந்து விட்டு வதக்கவும். நன்றாக குழைந்து எண்ணெய் பிரிந்து வரும்.
- இதில் தூள் வகை எல்லாம் சேர்த்து கலந்து விடவும்.
- இத்துடன் தயிர் சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
- கலவை ஒன்றாக கலந்து வந்ததும் மஷ்ரூம் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். மூடிவிட வேண்டாம்.
- இதில் தேங்காய் பால் மற்றும் 1 1/2 கப் நீர் விட்டு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
- கொதி வந்ததும் அரிசி சேர்த்து கலந்து மீண்டும் ஒரு கொதி விடவும்.
- ஒரு கொதி வந்ததும் சிறுந்தீயில் வைத்து மூடி வேக விடவும்.
- நன்றாக வெந்ததும் அடுப்பில் இருந்து எடுத்து குழையாமல் ஒரு முறை கலந்து மூடி வைக்கவும். சுவையான ஸ்பைசி மஷ்ரூம் பிரியாணி தயார்.
Note:
விரும்பினால் தம்மில் போடலாம். முக்கால் பதம் வெந்ததும் தம்மில் போட்டால் போதுமானது. இதில் கொத்தமல்லி புதினா தேவை இல்லை.
0 comments:
Post a Comment