- மஷ்ரூம் - 15
- மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
- மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
- இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
- புளிக்காத கெட்டியான தயிர் - ஒரு மேசைக்கரண்டி
- எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
- அரைக்க :
- முந்திரி - 15
- பாதாம் - 5
- கசகசா - ஒரு தேக்கரண்டி
- வெங்காயம் - 2
வெங்காயத்தை நீளமாக நறுக்கி சிறிதளவு எண்ணெய் விட்டு வதக்கி ஆற வைக்கவும். முந்திரி, பாதாம் மற்றும் கசகசாவை ஊற வைக்கவும். வெங்காயம் ஆறியதும் எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து அரைத்து வைக்கவும்.
| |
மீதமுள்ள எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
| |
பிறகு அரைத்து வைத்துள்ள விழுது சேர்த்து வதக்கவும். ஏற்கனவே வெங்காயம் வெந்து விட்டதால் அதிகம் வதக்க தேவையில்லை. இப்பொழுது தீயை குறைத்து வைத்து தான் வதக்க வேண்டும் இல்லையென்றால் மசாலா தீய்ந்து விடும்.
| |
இரண்டு நிமிடத்திற்கு பின்பு தயிர், உப்பு, மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்க்கவும். நட்ஸ் சேர்ப்பதால் அடிப்பிடிக்கும். அதையும் சேர்த்து சுரண்டி கிளற வேண்டும். அது தான் இதற்கு அதிகமான சுவையை தரும். தேவையெனில் சிறிதளவு தண்ணீர் தெளித்து விடவும்.
| |
மிளகாய் தூளின் பச்சை வாசம் அடங்கிய பின் அரிந்து வைத்த மஷ்ரூமை சேர்க்கவும்.
| |
வெந்ததும் சூடான சாதத்துடனோ அல்லது சப்பாத்தியுடனோ பரிமாறவும். சுவையான தவா மஷ்ரூம் ரெடி.
|
இதற்கு தண்ணீர் சேர்க்க தேவையில்லை. மஷ்ரூமில் உள்ள தண்ணீரே வேக போதுமானது. இஞ்சி பூண்டு அரைக்கும் போது இரண்டு புதினா இலை சேர்த்தால் இன்னமும் வாசமாக இருக்கும். தயிர் கெட்டியாக இல்லையென்றால் ஒரு மெல்லிய துணி கொண்டு வடிக்கட்டி அதில் உள்ள அதிகப்படியான தண்ணீரை அகற்றி விட்டு சேர்க்கவும். வாணலியில் அடி பிடித்திருக்கும் மசாலாவில் ஒரு கைப்பிடி சாதம் போட்டு பிசைந்தால் போட்டி போட்டுக் கொண்டு காலியாகி விடும்.
0 comments:
Post a Comment