Pages

Wednesday, 1 August 2012

மஷ்ரூம் தொக்கு



 
  • காளான் - ஒரு பாக்கெட்
  • வெங்காயம் - ஒன்று
  • தக்காளி - ஒன்று
  • உப்பு - தேவைக்கேற்ப
  • வறுத்து அரைக்க:
  • தனியா - 2 தேக்கரண்டி
  • மிளகு - ஒரு தேக்கரண்டி
  • சீரகம் - ஒரு தேக்கரண்டி
  • பெருஞ்சீரகம் - ஒரு தேக்கரண்டி
  • மிளகாய் வற்றல் - ஒன்று
  • பூண்டு - ஒரு பல்
  • தாளிக்க
  • எண்ணெய் - 2 தேக்கரண்டி
  • பட்டை - ஒன்று (சிறியது)
  • லவங்கம் - ஒன்று


முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைத்து கொள்ளவும்.
காளானை நீளமாகவும், வெங்காயம் மற்றும் தக்காளியை பொடி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
வறுக்க வேண்டிய பொருட்களை ஒரு கடாயில் போட்டு எண்ணெய் விடாமல் வாசம் வரும் வரை வறுக்கவும்.
வறுத்த பொருட்கள் ஆறியவுடன் மிக்ஸி ஜாரில் போட்டு அரைக்கவும்.
மிகவும் நைசாக இல்லாமல் கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை, லவங்கம் போட்டு தாளித்து வெங்காயம், தக்காளி மற்றும் உப்பு போட்டு நன்றாக வதக்கவும்.
அதனுடன் காளானை போட்டு தண்ணீர் விடாமல் நன்கு வேக விடவும். காளானே தண்ணீர் விடும் அதுவே போதுமானது.
இப்போது வறுத்த கலவையை போட்டு மூன்று நிமிடம் வேக விட்டு இறக்கவும்.
சுவையான மஷ்ரூம் தொக்கு தயார். இது சாதத்துக்கு ஏற்ற சைடு டிஷ்.

0 comments:

Post a Comment