- பொட்டு கடலை - 5 மேசைக்கரண்டி
- தக்காளி - ஒன்று (நடுத்தர அளவு)
- வெங்காயம் - ஒன்று (நடுத்தர அளவு)
- பச்சை மிளகாய் - 3
- கொத்தமல்லி - சிறிதளவு
- தாளிக்க :
- எண்ணெய்
- கடுகு, உளுத்தம் பருப்பு
- கடலைபருப்பு
தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
| |
தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாயை நீளவாக்கில் கீறி வைக்கவும். பொட்டுக்கடலையை மிக்சியில் போட்டு கொரகொரப்பாக பொடித்து வைத்துக் கொள்ளவும்.
| |
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து நன்கு சூடானதும் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கடலை பருப்பை பொரிய விடவும்.
| |
பிறகு பச்சை மிளகாயை போட்டு இரண்டு நிமிடம் வதக்கி, வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
| |
பின்பு, தக்காளியை சேர்த்து நன்கு குழைய வதக்கி தேவையான அளவு தண்ணீர், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து மூடி வைக்கவும்.
| |
தண்ணீர் ஓரளவு சுண்ட தொடங்கும் போது பாத்திரத்தை இறக்கி வைத்து பொடித்து வைத்த பொட்டுக்கடலையை மெதுவாக தூவி கட்டியில்லாமல் கலக்கவும். பிறகு கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
| |
இட்லி,தோசைக்கு சூப்பர் காம்பினேஷன்.
|
0 comments:
Post a Comment