- ஓட்ஸ்- ஒரு கப்
- அரிசி மாவு- கால் கப்
- ரவை- அரை கப்
- தயிர்- 1 கப்
- தண்ணீர்- தேவைக்கு
- உப்பு- தேவைக்கு
- எண்ணெய் அல்லது வெண்ணெய்- சிறிதளவு
- ஓட்ஸ் மற்றும் ரவையை குறைந்தது 15 முதல் இருபது நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைக்கவும்
- ஊறிய ஓட்ஸ் மற்றும் ரவையை தேவையான அளவு உப்பு இட்டு கையாலேயே பிசைந்துக்கொள்ளவும்.
- அரிசி மாவை சிறிது சிறிதாக சேர்த்து கலக்கவும். அத்துடன் தயிரையும் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கொண்டுவரவும்.
- அரை மணி நேரம் கழித்து தோசைக் கல்லை மிதமான சூட்டில் வைத்து இந்த மாவை தோசைக்கு ஊற்றுவது போல் நடுவில் ஊற்றாமல் தோசைக் கல்லை சுற்றி ஊத்தி நடுவில் கொண்டு வர வேண்டும்.
- மாவும் கொஞ்சம் தண்ணீர் போல் தான் இருக்கும். அதனால் தானாக நடுவில் வந்து கூடிவிடும்.
- எண்ணெய் விட்டு பின் திருப்பி போட்டு எடுக்கவும்.
- மொறு மொறு ஓட்ஸ் தோசை ரெடி.
Note:
இதனை மிக எளிதாக செய்துவிடலாம். தேவைப்பட்டால் கொத்தமல்லி, வெங்காயம் சேர்த்தும் செய்யலாம்.
0 comments:
Post a Comment