- 1. ரவை - 1/2 கப்
- 2. சர்க்கரை - 1/4 கப்புக்கு 2 தேக்கரண்டி குறைவு
- 3. மாம்பழ கூழ் - 1/2 கப் [ஏறக்குறைய 1 மாம்பழம்]
- 4. பேக்கிங் பவுடர் - 1/2 தேக்கரண்டி
- 5. ஏலக்காய் தூள் - சிறிது [விரும்பினால்]
- 6. வெண்ணெய் - 1/4 கப்
- மேலே அலங்கரிக்க:
- 7. மாம்பழ கூழ் - 1/4 கப்
- 8. சர்க்கரை - 1 தேக்கரண்டி
- 9. எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி
- பேக்கிங் டிஷ்ஷில் வெண்ணெய் தேய்த்து தயாராக வைக்கவும்.
- ரவை, சர்க்கரை, ஏலக்காயை மிக்ஸியில் பொடிக்கவும்.
- வெண்ணெயை உருக்கி ஆறியதும் மாம்பழ கூழ், ரவை கலவை, பேக்கிங் பவுடர், வெண்ணெய் எல்லாம் கலந்து விடவும்.
- அதிகம் அடித்து கலக்க கூடாது, மஃபின் கலப்பது போல் கலந்தால் போதுமானது.
- அவனை 190C’ல முற்சூடு செய்து இதை பேக்கிங் டிஷ்ஷில் ஊற்றி 15 - 20 நிமிடம் வரை பேக் செய்யவும்.
- டூத் பிக் கொண்டு குத்தி பார்த்தால் ஒட்டாமல் வரும், அப்போது எடுத்து விடலாம்.
- சுவையான ரவை மேங்கோ கேக் தயார்.
- மேலே அலங்கரிக்க கொடுத்தவற்றை மிக்ஸியில் அல்லது ப்லெண்டரில் நன்றாக அடித்து கொள்ளவும்.
- இதை ஸ்பூன் கொண்டு கேக் மேல் பூசி விடவும்.
Note:
ரவை மெல்லிய ரவையாக இருப்பது அவசியம். இல்லை எனில் வேகாது, சாப்பிடவும் சாஃப்டாக இருக்காது. விரும்பினால் பேக் செய்யும் முன் கீழே மாம்பழ துண்டுகள் போடலாம். பொடியாக நறுக்கிய மாம்பழங்களை மாவில் கலந்து பேக் செய்யலாம். நட்ஸ் சேர்க்கலாம். சர்க்கரையின் அளவை மாம்பழத்தின் இனிப்புக்கு ஏற்றபடி சேர்க்கவும். நான் பயன்படுத்தியது அல்ஃபோன்சா மாம்பழம். சர்க்கரை அளவு சற்று அதிகமாகவே இருந்தது. மேலே பூசும் கலவையை 1/2 கப் மாம்பழ கூழாக எடுத்து அடுப்பில் வைத்து பாதியாக குறையும் வரை கிளறியும் பூசலாம். இது நல்ல ஷைனிங் கொடுக்கும்.
0 comments:
Post a Comment