Pages

Tuesday 31 July 2012

மிக்சட் வெஜிடபுள் கறி



 
  • பச்சை பயறு - 100 கிராம்
  • முள்ளங்கி - சிறிதளவு
  • பரங்கிக்காய் - சிறிதளவு
  • பீர்கங்காய் - சிறிதளவு
  • கத்தரிக்காய் - 2 (சிறிது)
  • உருளைக்கிழங்கு - ஒன்று
  • பெரிய வெங்காயம் - 2
  • தக்காளி - ஒன்று
  • பூண்டு - 5 பல்
  • பச்சை மிளகாய் - 8
  • தாளிக்க:
  • கடுகு, உளுந்து - அரை மேசைக்கரண்டி
  • சீரகம் - கால் மேசைக்கரண்டி
  • காய்ந்த மிளகாய் - 2
  • எண்ணெய் - தேவையான அளவு
  • உப்பு - தேவையான அளவு


முதலில் பச்சைபயறை வாசம் வரும் வரை வாணலியில் வறுத்து, கழுவி அரை வேக்காடாக வேக வைத்துக் கொள்ளவும்.
எல்லா காய்களையும் சுத்தம் செய்து ஒரே மாதிரியான அளவில் நறுக்கி வைக்கவும்.
வெங்காயம், தக்காளியை நீளவாக்கில் அறிந்தும், பச்சை மிளகாயை கீரியும், பூண்டை நன்றாக இடித்தும் வைக்கவும்.
பாத்திரத்தில் நீர்விட்டு நறுக்கிய காய்களுடன், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், பூண்டு, உப்பு சேர்த்து வேக விடவும். முக்கால் வேக்காடு வெந்ததும் ஏற்கனவே வேக வைத்த பச்சை பயறை சேர்ந்து 10 நிமிடம் வேக விடவும்.
பின்னர் இறக்கி, ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, சீரகம் தாளிக்கவும். பின் காய்ந்த மிளகாய் சேர்த்து, சிறிது வெங்காயம், பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பின் அதை இறக்கி வைத்த காய்கறி கலவையுடன் சேர்த்து கிளறி மூடி விடவும்.
சுவையான சத்தான மிக்சட் வெஜிடபுள் கறி ரெடி. வெயில் காலத்திற்கு ஏற்ற கறி. இது சாதத்திற்கு நன்றாக இருக்கும். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

1. இங்கே கறிவேப்பிலை, கொத்தமல்லி இரண்டுமே கிடைக்காது. நீங்கள் தாளிக்கும் போது ஒரு இனுக்கு கறிவேப்பிலை சேர்த்து, தாளித்து கொட்டிய பின் கொத்தமல்லி இலை தூவி மூடி வைக்கவும்.
2. இதில் அவரவர் காரத்திற்கு ஏற்ப பச்சை மிளகாயை கூட்டியும் குறைத்தும் செய்யலாம். முக்கியமாய் குழந்தைகளுக்கு என்றால் காரத்தை நன்றாக குறைத்துக் கொள்ளவும். சிறு குழந்தைகளுக்கு மேலாக சூப் மட்டும் எடுத்தும் கொடுக்கலாம்.
3. இதில் சேர்க்கப்படும் அனைத்து காய்கறிகளும் நீர்சத்து உடையவை. ஆதலால் வெயில் காலத்திற்கு ஏற்ற நல்லதொரு கறி இது. இருப்பினும் ஆஸ்த்துமா (அ) வீசிங் பிரச்சினை உள்ளவர்கள் இந்த உணவை தவிர்க்கவும்.

0 comments:

Post a Comment